Wednesday, October 12, 2022

நெட் வொர்க்கின் அடிப்படைகள்



ஓபன் சிஸ்டம்:

நெட் வொர்க்குடன் கனக்ட் செய்யப்பட்டு தொடர்பு கொள்ளலுக்கு தயாராக இருக்கும் சிஸ்டம் ஆனது ஓபன் சிஸ்டம் எனப்படுகின்றது.

குளோஸ்டு சிஸ்டம்.

நெட் வொர்க்கில் இருந்து துண்டிக்கப்பட்டு தொடர்பு கொள்ளலுக்கு தயாராக இல்லாத சிஸ்டம் குளோஸ்டு சிஸ்டம் எனபடுகின்றது.

கம்ப்யூட்டர் நெட்வொர்க்.

ஹோஸ்ட் என அறியப்படும், டேட்டாவை அனுப்பவும்,பெறவும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட கருவிகளின் தொகுப்பே கம்ப்யூட்டர் நெட்வொர்க் எனப்படுகின்றது. இவை ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளில் இணைக்கப்படுகின்றது.

இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளப்பயன்படும் சாதனங்களையும் உள்ளடக்கியது.இவை நெட்வொர்க் சாதனங்கள் எனப்படுகின்றது.உதாரணத்திற்க்கு ஹப்ஸ்,ரௌட்டர்ஸ்,சுவிட்ச் மற்றும் பிரிட்ஜ்.



நெட் வொர்க் டோபலஜி(Topology).

ஒரு நெட் வொர்க்கில் இருக்கும் சாதனங்களில் ஒன்ற்க்கு மேற்பட்ட விதமான லேய் அவுட் ஏற்பாடு நெட்வொர்க் டோபாலஜி எனப்படுகின்றது.

உதாரணம்.

Bus, Star, Mesh, Ring, மட்டும்  Daisy chain. 




OSI

OSI என்பது ஓபன் சிஸ்டம் இன்டெர்கனக்சன் என்பதாகும். இது கம்யூனிகேசன் புரோட்டாகால்ஸ் ஸ்டாண்டர்ஸ் மற்றும் ஒவ்வொரு லேயர்களின் செயற்பாட்டையும் குறிப்பிடும் ரெஃபெரென்ஸ் மாடல் ஆகும்.

புரோட்டாகால்(PROTOCOL).

இவை இரண்டு சாதனங்கள் எவ்வாறு நெட் வொர்க்கில் தொடர்பு கொள்வது என்பது பற்றிய விதிமுறைகள் அல்லது அல்கரிதம்ஸ்  ஆகியவற்றின் அமைப்பாகும். OSI லேயரின் ஒவ்வொன்றிலும் வித விதமான புரோட்டாகால்கள் இருக்கின்றது . அவையாவன TCP, IP, UDP, ARP, DHCP, FTP ஆகும்.

யுனிக் ஐடிடெண்டிஃபையர்ஸ் ஆஃப் நெட்வொர்க்ஸ்.

ஹோஸ்ட் பெயர்.

ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் ஒவ்வொரு சாதனமும் தனிப்பட்ட பெயரைக் கொண்டுள்ளது.அதுவே ஹோஸ்ட் நேம் என அறியப்படுகின்றது.

கமாண்ட் பிராம்ப்டில் “hostname” என டைப் செய்து எண்டர் தட்டினால் உங்கள் மெசினின் ஹோஸ்ட் பெயர் காட்டப்படும்.








ஐபி அட்ரஸ்(internet protocol address).

இது நெட்வொர்க்கில் இருக்கும் சிஸ்டமின் நெட்வொர்க் அட்ரஸ் ஆகும். இது லாஜிக்கல் முகவரி என்றும் அறியப்படுகின்றது.

இண்டெர்நெட் அசைண்டு நம்பர்ஸ் அதாரிட்டி ஆனது www-வில் இருக்கும் ஒவ்வொரு சிஸ்டத்திற்கும் ஒரு IPV4(VERSION 4) தனிப்பட்ட முகவரியை வழங்குகின்றது.

ஒரு IPV4 முகவரியின் நீளம் 32 பிட் ஆகும் .நமக்கு 232 IP முகவரிகள் தயாராக உள்ளது. ஒரு IPV6 முகவரியின் நீளம் 128 பிட் ஆகும்.

கமாண்ட் பிராம்ப்டில் “ipconfig” என தட்டச்சு செய்து எண்டர் தட்டினால் அதன் ip அட்ரஸ் கிடைக்கும்.

 

MAC Address(media access control address)

இது பிஸிக்கல் அட்ரஸ் எனவும் அறியப்படுகின்றது.இது ஒவ்வொரு ஹோஸ்டிற்கும் தனிப்பட்ட முகவரி ஆகும். இது நெட்வொர்க் இன்டர்ஃபேஸ் கார்டுடன் தொடர்புடையது.mac அட்ரஸ்ஆனது அது தயாரிக்கப்படும் பொழுதே மதிபிருத்தப்படுகின்றது.

Mac அட்ரசின் நீளம்: 12-nibble/ 6 bytes/ 48 bits 

கமாண்ட் பிராம்ப்டில் “ipconfig/all”என டைப் செய்து எண்டர் தட்டினால் mac address கிடைக்கும்.

போர்ட்:

இது ஒரு பயன்பாட்டிற்க்கு டேட்டாவை அனுப்பவோ அல்லது பெறவோ பயன்படும் லாஜிக்கல் சேனல் ஆகும்.

ஒவ்வொரு ஹோஸ்டும் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை பயன்படுத்தலாம்.ஒவ்வொரு பயன்பாடும் வெவ்வேறு போர்ட்  எண்ணை பயன்படுத்தும்.

ஒவ்வொரு போர்ட்டும் 16 பிட் இன்டிஜெர் ஆகும்.

அவற்றின் வகைகள்:

Port Types

Range

Well known Ports

0 – 1023

Registered Ports

1024 – 49151

Ephemeral Ports

49152 – 65535

 

No of ports : 65,536

Range : 0 to 65,535.

கமாண்ட் ப்ராம்ப்டில் “netstat-a” என தட்டச்சு செய்து எண்டர் தட்டினால் பயன்பாட்டில் உள்ள எல்லா போர்ட்டுகளையும் காட்டும்.




 

சாக்கெட்:(socket)

Ip அட்ரஸ் மற்றும் போர்ட் எண் இரண்டும் சேர்ந்த யுனிக் காம்பினேசன் தான் சாக்கெட் ஆகும்.

Dns சர்வர்:

DNS என்பது டொமைன் நேம் சிஸ்டம் ஆகும்.

இது வெப் அட்ரசுகளை ஐபி அட்ரஸாக மொழிபெயர்க்கும் சர்வர் ஆகும்.எனவே ஒவ்வொரு இணைய தளங்களின் ஐபி முகவரியை ஞாகபத்தில் வைத்திருக்க தேவையில்லை.

‘nslookup’ என்ற கமாண்ட் ஆனது நமக்கு வேண்டிய டொமைனின் ip address ஆனதை தருகின்றது.



 

ARP: ADDRESS RESOLUTION PROTOCOL.

இது ஒரு IP அட்ரசை அதனுடன் தொடர்புடைய பிசிக்கல் அட்ரசை ரிடர்ன் செய்கின்றது.அதாவது MAC ADDRESS.

ARP ஆனது டேட்டா லிங்க் லேயரால் பயன்படுத்தப்படுகின்றது.இது ரிசிவர்ஸ் மெசினின் பிசிக்கல் அட்ரசை பெற பயன்படுகின்றது.

RARP:REVERSE ADDRESS RESOLUTION PROTOCOL.

இது ஒரு பிசிக்கல் அட்ரசை IP அட்ரசாக மாற்ற பயன்படுகின்றது.

எனினும் இப்பொழுது DHCP வந்த பிறகு இது பயன்பாட்டில் இல்லை.

நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

PYTHON, JAVA,PHP,C,C++,C#,VB.NET, ASP.NET,JAVASCRIPT, ANGULAR, REACT JS ஆன்லைனில் கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

9629329142


ads Udanz

No comments:

Post a Comment