Wednesday, October 26, 2022

Tally prime 2.0 cost category மற்றும் cost center

 





 

டேலியில் குறிப்பிட்ட யூனிட் ஒன்றினை மையமாக வைத்து நாம் அதற்கான இன்ஃப்லோ(inflow) மற்றும் அவுட்ஃப்லோ(outflow) ஆகியவற்றை நாம் எளிதாக கணக்கிடலாம்.

அந்த குறிப்பிட்ட யூனிட்டை நாம் காஸ்ட் செண்டராக உருவாக்கலாம்.அந்த காஸ்ட் செண்டர்களை நாம் குரூப் செய்யலாம். அந்த குரூப்பின் பெயராக காஸ்ட் கேட்டகிரி இருக்கும்.

உதாரணமாக நாம் சேல்ஸ்மேன் என்கின்ற ஒரு காஸ்ட் கேட்டகிரியை உருவாக்குவதாக வைத்துக் கொள்வோம்.இது ஒரு குரூப். இந்த குரூப்பின் கீழ் நாம் காஸ்ட் செண்டர்களை உருவாக்கலாம்.அதாவது MR.Muthu,MR.karthkeyan என வைத்துக் கொள்வோமே.

இப்பொழுது சேல்ஸ்மேன் கமிசன் ரூ 15000 என எடுதுக்கொள்வோம். இந்த கமிசனை நாம் வவுச்சர் என்ட்ரியில் MR.Muthu எங்கின்ற காஸ்ட் செண்டருக்கும்MR.Karthikeyan என்கின்ற காஸ்ட் செண்டருக்கும் பிரித்து மதிப்பிடலாம்.

முதலில் டேலி ப்ரைமில் ஒரு கம்பெனி உருவாக்கிக் கொள்வோம்.

 


கேட் வே ஆஃப் டேலியில் முதலில் create என்பதை கிளிக் செய்யவும்.



பிறகு cost category என்பதை தேர்வு செய்யவும்.



பின் உதாரணத்திற்கு “seles man” என்றொரு கேட்டகரி உருவாக்கவும்.



 

பிறகு Muthu, karthikeyan என இரு  காஸ்ட் சென்டெர்கள் உருவாக்கிக் கொள்ளவும்.





பிறகு salary என ஒரு இண்டைரக்ட் எக்ஸ்பென்செஸ் லெட்ஜெர் உருவாக்கிக் கொள்ளவும்.



பிறகு ஒரு பேய்மெண்ட் டைப் வவுச்சர் ஒன்றை உருவாக்கவும்.



 

அடுத்து வரும் ஸ்கிரினில் இரண்டு காஸ்ட் சென்டருக்கும் தொகையை பிரிக்கவும்.

 

 


 

 

 

 

 

இப்பொழுது கேட் வே ஆஃப் டேலியில் Display more reports என்பதை தேர்ந்தெடுத்து அடுத்து வரும் திரையில் statement of accounts என்பதை தேர்ந்தெடுக்கவும்.

 

 


 

அடுத்து cost center என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில் cost category என்பதை தேர்ந்த்தெடுக்கவும். நமக்கு சென்டெர் வாரியாக தொகை காட்டப்படும். இதை அடுத்து cost center break up என்ற ஆப்சன் மூலமும் ரிப்போர்ட்டை பார்வையிடலாம்.

நன்றி

முத்து கார்த்திகேயன், மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment