கோரல் டிராவில் பவர் கிளிப் ஆப்சன் ஒளி படங்களை
குறிப்பிட்ட வடிவில் வெட்டி எடுக்க பயன்படுகின்றது.
உதாரணத்திற்கு முதலில் கோரல் டிராவை ஓபன்
செய்து எலிப்ஸ் டூலை செலெக்ட் செய்யவும்.
பின் ctrl கீயை அழுத்திய படியே ஒரு வட்டம்
வ்ரையவும்.
பின் p என்கின்ற கீயை அழுத்தினால் வட்டம்
விண்டோவின் மத்தியில் வந்து விடும்.
பின்பு file மெனு சென்று import ஆப்சனை கிளிக்
செய்யவும் இப்பொழுது ஒரு படத்தை தேர்வு செய்து டிராக் கொடுக்கவும்.
இப்பொழுது arrange மெனு சென்று
order என்பதில் to ack to page என்பதை தேர்வு
செய்யவும்.
இப்பொழுது படம் பின்னால் சென்று
விடும். வட்டம் முன்னால் வந்து விடும்
இப்பொழுது effects மெனு
சென்று powerclip-> place inside container என்பதை தேர்வு செய்து வட்டத்தின் உள்ளே
கிளிக் செய்ய்யவும்.இப்பொழுது
படமானது கீழ் கண்டவாறு வட்ட
வடிவில் வெட்டி எடுக்கப் பட்டிருக்கும்.
இதே எழுத்துக்களின் வடிவிலும் படத்தை வெட்டி
எடுக்கலாம்.
அதற்கு முதலில் டெக்ஸ்ட் டூல் செய்து விண்டோவில்
டெக்ஸ்ட் டைப் செய்யவும்.
இப்பொழுது file->import சென்று படத்தை
தேர்வு செய்து விண்டோவில் டிராக் செய்யவும்.
இப்பொழுது arrange ->order->to
back of page என்பதை தேர்வு செய்யவும்,
படம் பின்னால் சென்று விடும். டெக்ஸ்ட் முன்னால்
வந்து விடும்.
இப்பொழுது
effects->powerclip->place inside container தேர்வு செய்து டெக்ஸ்டின் மேல் வைத்து
கிளிக் செய்யவும். இப்பொழுது படமானது டெக்ஸ்டின் மீது வெட்டப் பட்டிருக்கும்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment