Monday, March 18, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்ளலாம். பகுதி-2

 


நோட் ஜெ எஸ் நிறுவுதல்.



கூகுளில் Node js எனத் தந்து தேடவும். வரும் ரிசல்டில் nodejs.org செல்லவும்.

கீழ் வரும் பக்கம் காண்பிக்கப்படும்.



இதில் lts வெர்சன் , current வெர்சன் என இரண்டு காட்டப்படும்.

இதில் lts வெர்சன் தேர்ந்தெடுக்கவும்.

இந்தப்பக்கமானது os -ஐ அதுவே கண்டுபிடித்து காட்டும். உதாரணத்துக்கு மேலே உள்ள பக்கம் விண்டோசில் தேடிப்பார்க்கும் பொழுது தானாகவே காண்பிக்கப்படுகின்றது.

வேறு os எனில் download லிங்கை கிளிக் செய்யவும்.

இதில் os-க்கு ஏற்றார் போல் தேர்ந்த்தெடுத்து டவுன் லோட் செய்து கொள்ளவும்.

இப்பொழுது ஃபைலை ரன் செய்யவும்.







சுலபமான நெக்ஸ்ட் , நெக்ஸ்ட் நிறுவுதல்-தான்.

நிறுவிய பிறகு கமாண்ட் பிராம்ப்ட் சென்று நோட் நிறுவப்பட்டிருக்கின்றதா என்று உறுதி செய்யவும் .

கமாண்ட் ப்ராம்ப்டில் node -v எனக் கொடுக்கவும்.

Node வெர்சன் காட்டப்படும்.



பிழைச் செய்தி காட்டப்பட்டால் நோடை மறுபடியும் நிறுவவும்.

நன்றி

தொடரும்.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

No comments:

Post a Comment