Thursday, March 21, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்வோம் -பகுதி4

 



விசுவல் ஸ்டுடியோ கோடை ஓபன் செய்யவும்.

File-> open folder

ஆப்சன் செல்லவும்.

நான் ஏற்கனவே E டிரைவில் node prgs என்றொரு ஃபோல்டர் உருவாக்கி வைத்துள்ளேன்.

அதை ஒபன் செய்து கொள்கின்றேன்.

அந்த ஃபோல்டரில் newprg.js என்றொரு ஜாவா ஸ்கிரிப்ட் ஃபைல் உருவாக்கவும்.

Console.log(“Welcome by Muthu karthikeyan”);

என்று டைப் செய்யவும்.

Ctrl+s கொடுத்து ஃபைலை சேவ் செய்யவும்.

Terminal-> New Terminal

செல்லவும்.

டெர்மினலில்

Node newprg.js எனக் கொடுத்தால்

Welcome by Muthu karthikeyan

என வெளீயீடு செய்யும்.

அடுத்து input.js என புதிய ஃபைலை உருவாக்கவும்.

இதில் இன்புட் வாங்குவது எப்படி என பார்க்க இருக்கின்றோம்.

const readline = require('readline');

const rl = readline.createInterface({

    input: process.stdin,

    output: process.stdout

})

கொடுத்துள்ளோம் . அதாவது முதலில் readline என்றஆப்ஜெக்டை இம்போர்ட் செய்துள்ளோம். அதை readline என்ற கான்ஸ்டண்டில் மதிப்பிருத்தியுள்ளோம்.

பிறகு அதைப் பயன்படுத்தி ஒரு இன்புட் அவுட்புட் செய்ய ஒரு இன்டெர்ஃபேசை உருவாக்கியுள்ளோம்.

அடுத்து

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

 

})

இப்பொழுது rl என்ற கான்ஸ்டண்டில் இன்புட் வாங்க வேண்டி முதலில் பிராம்ப்ட் , அடுத்த்து அதை log செய்து ஒரு கமாண்ட் என(callback ஃபங்க்சன்)

கொடுத்துள்ளோம்.

இப்பொது டெர்மினலில்.

Node input.js

எனக் கொடுத்தால்.

What’s your age

எனக்காட்டும்

45

என உள்ளீடு செய்தால்

You are 45 years old

வெளியீடு செய்யும் ஆனால் அது அந்த பிராசசை விட்டு வெளியேறியிருக்காது.

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

    rl.close();

})

அதாவது rl.close() என்ற ஃபங்க்சனை அழைத்துள்ளோம்.

இப்பொழுது கோடை ரன் செய்தால் இன்புட் மற்றும் அவுட்புட்டிற்கு பிறகு பிராசசை விட்டு வெளியேறியிருக்கும்.

அடுத்து close ஈவண்டில் ஒரு கோடிங்கை இயக்குவதற்கு கூடுதல் நிரல் வரிகள் சேர்த்து முழுமையான நிரலாக பின் வருமாரு எழுதுவோம்.

const readline = require('readline');

const rl = readline.createInterface({

    input: process.stdin,

    output: process.stdout

})

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

    rl.close();

})

rl.on("close", () => {

    console.log("bye visit again!");

    process.exit(0);

}

)

வெளியீடு:

PS E:\node prgs> node input.js

What's your age45

you are 45 years old

bye visit again!

PS E:\node prgs>

அதாவது rl ஆனது close ஆகும் பொழுது bye visit again! என log செய்துள்ளேன்.

பிறகு மொத்த பிராசசை விட்டு வெளியேற

Process.exit(0);

எனக் கொடுத்துள்ளேன்.

தொடரும்.

நன்றி

முத்துக் கார்த்திகேயன், மதுரை

 

 

 


ads Udanz

No comments:

Post a Comment