Sunday, March 3, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்வோம். பகுதி -1

 



 

நோட் ஜெ எஸ்(NODE JS) என்பது என்ன?

Node js is a java script run time built on Google’s open source v8 engine.

அதாவது

நோட் ஜெ எஸ் ஒரு இயக்க நேர சூழல் ஆகும்.

இது கூகுளின் v8 எஞ்சினை பயன்படுத்துகின்றது.

 

எந்த பிரவுசர் என்றாலும் அது Html, Css, Javascript ஆகியவற்றை புரிந்து கொள்ளும். ஒரு பிரவுசரில் உள்ள ஜாவாஸ்கிரிப்ட் எஞ்சின் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை இயக்குகின்றது. பிரவுசர் ஆனது fetch, getElementById, Selector, Console.log போன்ற API -க்களையும் ஃபங்க்சன்களையும் தருகின்றது.

2019 வரை ஜாவா ஸ்கிரிப்ட் ஆனது பிரவுசருக்கு உள்ளே மட்டும் இயங்கி வந்தது. பிரவுசருக்கு வெளியே எந்த ஜாவா ஸ்கிரிப்ட் நிரலும் இயக்கப்பட வில்லை.

ஒவ்வொரு பிரவுசரும் அதன் உள்ளே ஒவ்வொரு வகையான ஜாவா ஸ்கிரிப்ட் எஞ்சின்களை கொண்டுள்ளது.

சான்று:

FireFox – spider monkey

Chrome- v8 Engine

Edge – சக்ரா

என ஒவ்வொரு பிரவுசரும் ஒவ்வொரு வகையான எஞ்சின்களை கொண்டுள்ளது.

குரோமை பொறுத்த வரை v8 எஞ்சின் தான் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை இயக்குவதற்கு பொறுப்பு.

2009-ல் ரியான் என்ற நிரலாளர் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார். ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை பிரவுசருக்கு வெளியே இயங்க வைப்பது அவருடைய யோசனை.

அவர் v8 எஞ்சினை எடுத்து அதை C++ புரோக்கிராமின் உட் புகுத்தினார்.

அது தான் நோட் என அழைக்கப்படுகின்றது. நோட் ஜெ எஸ் என்பது ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை இயக்கக் கூடிய ரன் டைம் என்விரான்மென்ட் ஆகும். இது ப்ளைன் ஜாவா ஸ்கிரிப்டை விட கூடுதல் API-க்களை கொண்டுள்ளது.

Node js is the Java script run time and some additional APIs.

.

இப்பொழுது Node Js ஆனது பிரவுசருக்கு வெளியே தனித்தியங்க கூடிய நிலையில் உள்ளது. மேலும் இது ஜாவா ஸ்கிரிப்டால் செய்யக்கூடியவற்றைக் காட்டிலும் கூடுதல் செயற்பாடுகளை செய்கின்றது. ஃபைல் சிஸ்டமை ஆக்சஸ் செய்தல், நெட் வொர்க் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கடைசியில் இப்பொழுது நோட் ஜெ எஸ் ஆனது சர்வர் சைடில் இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட் ஆக விளங்குகின்றது.

இது வேகமானது.

Scalable.

ஜாவா ஸ்கிரிப்ட் வேகமானது ஆகவும் பல்மடங்கு பெறுகும் படியாகவும் உள்ளதற்கு காரணம் இது சிங்கிள் திரட்டில் இயங்குகின்றது.

இது ஈவண்ட் ட்ரைவிங்க் மற்றும் நான்-பிளாக்கிங்க் I/O சிஸ்டமைக் கொண்டுள்ளது. இதனால் இது லைட் வெய்ட் ஆகவும் விளங்குகின்றது.

வேகமான மற்றும் Scalable ஆன டேட்டா இண்டெண்சிவ் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நோட் ஜெ எஸ் சிறந்தது.

இந்த தொடரில் நோட் ஜெ எஸ் மற்றும் மாங்கோ டிபி ஆகியவற்றைக் கொண்டு எவ்வாறு டேட்டா இண்டென்சிவ் அப்ளிகேசன்களை உருவாக்குவது என்று பார்ப்போம்.

மாங்கோ டிபி  மற்றும் நோட் ஜெ எஸ் கொண்டு  டேட்டா இன்செர்ட் செய்தல் டேட்டா கேட்டு பெறுதல், டேட்டா அப்டேட் செய்தல், டேட்டா அழித்தல் ஆகியவற்றை எவ்வாறு  செய்வது என பார்க்கலாம்.

API மட்டும் அல்லது நோட் கொண்டு சில வகையான பயன் பாடுகளை உருவாக்கலாம்.

Streaming apps அதாவது யூடியூப், நெட் பிளிக்ஸ் போன்ற கனமான சர்வர் பயன்பாடுகளை உருவாக்க நோட் ஜெ எஸ் உகந்தது அல்ல.

நோட் ஜெ எஸ்ஸால் முடியாதது:

1.     இமேஜ் மேனிபுலேசன்

2.     வீடியோ கன்வெர்சன்

3.     ஃபைல் கன்வெர்சன்.

 

Uber, paypal, Ebay போன்ற நிறுவனங்கள் நோட் ஜெ எஸ்ஸை பயன்படுத்துவதால் நாமும் நோடை பயன்படுத்தலாம்.

 

நோட் ஜெ எஸ் மூலம் ஜாவா ஸ்கிரிப்டை ஃப்ரண்ட் எண்ட் மற்றும் பேக் எண்ட் ஆகிய இரு பக்கங்களிலும் பயன்படித்த முடிகின்றது.

அதனால் சர்வர் சைட் பயன்பாட்டிற்கென்று புதிய மொழியை கற்க அவசியமில்லை.

நோட் ஜெ எஸ் ஓபன் சோர்ஸ் லைப்ரரிகள் நிறைய இணையத்தில் இலவசமாக நிறைய கொட்டிக் கிடக்கின்றது.

இந்த பேக்கேஜ்கள் npm பயன்பாட்டிற்கு தயாரான நிலையில் உள்ளது.

நோட் ஜெ எஸ் நிரலாளர்களுக்கான பெரிய  கம்யூனிட்டியும் இணையத்தில் உள்ளது.

                                                              நன்றி

                                                                                   முத்து கார்த்திகேயன் , மதுரை

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment