ADRotator control ஆனது
விளம்பரங்களை இணையதளங்களில்வெளியிட பயன்படுகின்றது.இந்த கன்ட்ரோல் ஆனது ASP.NET-ல்
உள்ளது. இது ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு படங்களை வெளியிடலாம். அந்த படத்தை கிளிக்
செய்யும் பொழுது மற்றொரு ஒரு வெப் பேஜ் ஆனது ஒபன் ஆகின்றது.
முதலில் ஒரு XML FILE ஒன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அந்த ஃபைலில்<Advertisements>
ஆனது
ரூட் டேகு ஆக இருக்க வேண்டும்.இந்த டேக்கிற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட <Ad>
ஆனது இருக்கும். ஒவ்வொரு ஆட் டேக்கும் ஒரு விளம்பரத்தினைக் கொண்டிருக்கும்.
முதலில் asp.net-ல் ஒரு project ஒன்றினை உருவாக்கி கொள்ள
வேண்டும்.
இப்பொழுது solution explorer –யை பார்வையிடவும்.இப்பொழுது இந்த
project-ல் ஒரு web form ஒன்றினை உருவாக்க வேண்டும். Project menu சென்று Add New
Item என்பதை கிளிக் செய்யவும்.(short cut key ctrl+shift+A.) அதில் web form என்பதை செலெக்ட்
செய்யவும். பிறகு add என்கின்ற பட்டனைக்
கிளிக் செய்யவும்.
மேலும் ஒரு xml file ஒன்றினை ப்ராஜெக்டில் சேர்க்க வேண்டும்.
இதற்கு project மெனுவில் add new item
என்பதினை செலெக்ட் செய்து பின்பு வரும் டயலாக் பாக்சில் இடது புறம் data என்பதை
செலெக்ட் செய்யவும்.இப்பொழுது வலது புறம் xml file என்பதை செலெக்ட் செய்யவும் கீழே
இங்கு xml file-ந் பெயராக நான் ad.xml என பெயரிட்டுள்ளேன்.நீங்கள் விரும்பிய பெயரை
இதற்குக் கொடுக்கலாம்.
Element
|
Description
|
<ImageUrl>
|
இமேஜ் ஃபைலின் பாத்
|
<NavigateUrl>
|
இமேஜை கிளிக் செய்யும் பொழுது ஒபன்
ஆக வேண்ஸ்டிய இணைய தளத்தின் URL
|
<AlternateText>
|
OPTIONALஇமேஜை திறக்க முடியா
விட்டால் டிஸ்ப்லேய் ஆக வேண்டிய மெஸ்ஸேஜ்
|
<Keyword>
|
OPTIONAL.
விளம்பரத்தின்
CATEGORY.
|
<Impressions>
|
Optional.
Display ஆக வேண்டிய விகிதம்.
|
முதலில் ப்ராஜெக்டில் ஒரு imagaes எங்கின்ற ஃபோல்டர்
உருவாக்கவும். பிறகு அதில் ஒன்று அல்லது அர்தற்கும் மேற்பட்ட படங்களைச் சேர்த்துக்
கொள்ளவும்.
இப்பொழுது xml ஆனது பின் வருமாறு இருக்கலாம்.
<?xml version="1.0" encoding="utf-8" ?>
<Advertisements>
<Ad>
<ImageUrl>~/images/google.png</ImageUrl>
<NavigateUrl>http://google.com</NavigateUrl>
<AlternateText>google</AlternateText>
<Keyword>google</Keyword>
<Impressions>50</Impressions>
</Ad>
<Ad>
<ImageUrl>~/images/youtube.png</ImageUrl>
<NavigateUrl>http://youtube.com</NavigateUrl>
<AlternateText>youtube</AlternateText>
<Keyword>youtube</Keyword>
<Impressions>25</Impressions>
</Ad>
</Advertisements>
இப்பொழுது வெப் ஃபார்மில் adrotator control ஒன்றை சேர்த்துக் கொள்ளவும். அதன்
advertisementfile என்கின்ற ப்ராப்பர்டிக்கு ad.xml என கொடுக்கவும். மேலும் target
என்கின்ற பண்பிற்கு _blank என் கொடுத்தால் விளம்பரத்தை கிளிக் செய்யும் பொழுது வெப்
பக்கமானது புதிய விண்டோவில் பிறக்கும்.
<%@ Page Language="C#" AutoEventWireup="true" CodeBehind="WebForm1.aspx.cs" Inherits="WebApplication18.WebForm1" %>
<!DOCTYPE html>
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head runat="server">
<title></title>
</head>
<body>
<form id="form1" runat="server">
<div>
<asp:AdRotator ID="AdRotator1" runat="server" AdvertisementFile="~/ad.xml" Target ="_blank"/>
</div>
</form>
</body>
</html>
வெளியீடு:
இப்பொழுது
இமேஜ் மேல் கிளிக் செய்தால் கூகில் இணைய பக்கம் ஒபென் ஆகும்.
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை
No comments:
Post a Comment