ஃபார்மில்
ப்ராப்பர்டிகள்:
ஒரு ஃபார்மின்
பிராப்பர்ட்டி ஆனது இயக்க நேரத்தில் அதன் தோற்றத்தை நிர்ணயிக்கின்றது.
உதாரணத்திற்கு size, background color மற்றும் பொசிசன்
போன்றவை.
ஃபார்மின்
முக்கியமான பிராப்பர்ட்டிகள்:
Name:
இந்த
பிராப்பர்ட்டி ஆனது ஃபார்மின் பெயரைக் குறிப்ப்ட பயன்படுகின்றது.. டிஃபால்ட் ஆக அதன்
பெயர் Form1 ஆகும்.
BackColor
:ஒரு
ஃபார்மின்ப் பேக்ரவுண்ட் கலரை குறிப்பிட உதவுகின்றது.
BackgroundImage:
ஒரு ஃபார்மின்
பேக்ரவுண்ட் இமேஜை குறிப்பிட உதவுகின்றது.
பேக்ரவுண்ட்
இமேஜ் பிராப்ப்பர்டிக்கு அடுத்து உள்ள … என்ற பட்டனை ரைட் கிளிக் செய்து reset என்கின்ற
ஆப்சனை தேர்வு செய்வதன் மூலம் பேக்ரவுண்ட் இமேஜை நீக்கலாம்.
font:
ஒரு ஃபார்மில்
வரும் வெவ்வேறு கன்ட்ரோல்களின் எழுத்துருக்களின் சைஸ், ஸ்டைல், மற்றும் அதன் டைப் போன்ற்வற்றை
தேர்ந்தெடுக்க உதவுகின்றது.
Size
ஒரு ஃபார்மின்
அகலம் மற்றும் உயரத்தை தேர்ந்தெஉக்க உதவுகின்றது..
StartupPosition:
இந்த
பிராப்பர்ட்டியானது ஓரு ஃபார்ம் ஆனது மானிட்டரின் எந்த இடத்தில் தோன்ற வேண்டும் என்பதைக்
குறிப்பிட உதவுகின்றது.
Manual:
Location
மற்றும் சைஸ் அதன் தோன்றும் இடத்தை குறிப்பிட உதவுகின்றது.
CenterScreen:
form
ஆனது திரையின் மத்தியில் தோற்றுவிக்க உதவுகின்றது.
WindowsDefaultLocation:
இது
விண்டோஸின் டிஃபால்ட் லொகேசனில் ஃபார்மை தோன்ற வைக்கின்றது. இதன் சைஸ் ஃபார்மின் பிராப்பர்டியில் கொடுத்ததாகும்.
WindowsDefaultBounds:
இது
விண்டோஸின் டிஃபால்ட் லொகேசனில் ஃபார்மை தோன்ற வைக்கின்றது. இதன் சைஸை windows
os நிர்ணயிக்கின்றது.
CenterParent:
ஒரு
ஃபார்ம் ஆனது இன்னொரு ஃபார்மின் சைல்ட் ஆக தோன்றும். இந்த பிராப்பர்ட்டியை செலெக்ட்
செய்தால் ஃபார்ம் ஆனது பேரண்ட் ஃபார்மின் மத்தியில் தோன்றும்.
Text:
ஃபார்மின்
டைட்டில் பாரில் தோன்றும் டெக்ஸ்டை குறிப்பிட உதவுகின்றது.
WindowState:
இந்த பிராப்பர்ட்டியானது ஃபார்ம் minimized,
maximized or normal இவற்றில் எவ்வாறு தோன்ற வேண்டும் என்பதைக் குறிப்பிட உதவுகின்றது.
விண்டோஸ்
ஃபார்ம் ஈவண்ட்ஸ் :
ஒரு பயனர்
குறிப்பிட்ட ஆக்சனை செய்யும் பொழுது ஒரு ஈவண்ட் ஃபையர் ஆகின்றது.. உதாரணத்திற்கு பயனர்
ஒரு பட்டனை கிளிக் செய்தால் பட்டனின் கிளிக் ஈவண்ட் ஃபையர் ஆகின்றது.
நாம்
ஒரு குறிப்பிட்ட ஈவண்டில் குறிப்பிட்ட நிரல் வரிகளை இயக்கலாம். உதாரணமாக ஃபார்மிம்
லோட் ஈவண்ட்டில் லிஸ்டிற்கு ஐட்டம்ஸ் ஆட் செய்யலாம்.
Click
இந்த
ஈவண்ட் ஆனது ஃபார்மின் எங்கு கிளிக் செய்தாலும் ஏற்படுகின்றது.
Closed
ஃபார்மை
மூடும் போது இந்த ஈவண்ட் ஏற்படுகின்றது.
Deactvate:
இந்த
ஈவண்டானது இந்த ஃபார்ம் ஃபோக்கஸை இழக்கும் போது ஏற்படுகின்றது.
Load
இந்த
ஈவண்ட் ஆனது ஃபார்ம் மெமரியில் லோட் ஆகும் போது ஏற்படுகின்றது. ஒரு ஃபார்மில் உள்ள
எலிமெண்ட்களின் தொடக்க மதிப்பிருத்த இந்த ஈவண்ட் பயன்படுகின்றது
.MouseMove
இந்த
ஈவண்ட் ஆனது ஃபார்மின் மேல் மவுஸ் மூவ் செய்யும் பொழுது ஏற்படுகின்றது..
MouseDown
இந்த
ஈவண்ட் ஆனது ஃபார்மின் மேல் மவுஸ் டவுன் செய்யும் பொழுது ஏற்படுகின்றது..
MouseUp:
இந்த
ஈவண்ட் ஆனது ஃபார்மின் மேல் மவுஸ் அப் செய்யும் பொழுது ஏற்படுகின்றது..
விண்டோஸ்
ஃபார்ம் மெத்தட்ஸ்:
இந்த
லைப்ரரி மெதட்களானது அது அழைக்கப் படும் பொழுது குறிப்பிட்ட செயல்களை செய்கின்றது.
Show()
ஒரு ஃபார்ம்
ஆனது தோன்றுகின்றது..
Activate()
ஒரு ஃபார்மின்
மேல் ஃபோக்கஸ் ஏற்படுத்துகின்றது.
Close()
ஒரு ஃபார்மை
மறைய வைக்கின்றது.
SetDesktopLocation()
ஒரு ஃபார்மின்
லொக்கேசனைக் குறிப்பிட உதவுகின்றது ., இதற்கு x மற்றும் y ஆனது பராமீட்டராக பாஸ் செய்யப்படுகின்றது.
-முத்து
கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment