இனியதொரு மாலைப்பொழுதினில் தேநீரைச் சுவைத்தபடியே
லேப்டாப்பில் ப்ரவுஸ் செய்து கொண்டிருந்தேன். திடீரென இண்டர்நெட் கனக்டிவிட்டி ஐகானில்
கிராஸ் மார்க் காட்டியது. நெட்டில் ப்ரவுஸ் செய்ய இயல வில்லை
லேன் கேபிள் மாற்றிப்பார்த்தேன்.என்னுடைய
கனெக்சன் டைப் ADSL ஆகும்.
பிசியில் (pc) கனெக்டிவிட்டி சரியாக இருந்தது.
கஸ்டமர் கேர் செண்டரை அனுகிய பொழுது அவர்கள் பக்கத்திலிருந்து எந்த பிழையும் இல்லை
என்று கூறி விட்டார்கள். எனக்கும் அது நன்றாகத் தெரியும். ஏனென்றால் பிசியில் ஆக்சஸ்
சரியாக இருக்கின்றதே. ட்ரபிள் ஷூட்டிங் செய்த பொழுது system diagnostics policy
service not running என பிழை சுட்டப்பட்டது.
இதை எவ்வாறு இயங்க வைப்பது என்று பிசியில்
ப்ரவுஸ் செய்த பொழுது விண்டோஸ் +R பட்டனை ப்ரஸ்
செய்து services.msc என கொடுக்குமாறும் அதன் பிறகு வரும் விண்டோவில் system diagnostics
policy service-ல் வலது க்ளிக் செய்து ஸ்டார்ட் ஆப்சனை க்ளிக் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது.
அது போல் செய்த பொழுது Error no:5 access denied எனக்காட்டியது. மேலும் ப்ரவுஸ் செய்த
பொழுது அட்மினிஸ்ரட்டர் அக்கவிண்டில் லாக் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. என்னுடைய
அக்கவுண்ட் டைப்பை சோதித்த போது அது ஏற்கனவே அட்னிஸ்ரட்டர் டைப் எனத்தெரிந்தது. Error
no5 தொடர்பாக குறிப்பிட்டப்ளாக் போஸ்டிங்குகளை ரீட் செய்ய இண்டர்னெட்டில் வ்ழி கூறப்பட்டிருந்தது,எனக்கு
கிர் என்று தலை சுற்றியது.
இது போன்ற விஷயங்களில் எக்ஸ்பெர்ட் ஆன சினேகாவை
அழைத்த பொழுது அவள்
“ஸிம்பிள், கணினியை ரீஸ்டோர் செய் சரியாய்
போய்விடும் “ என்றாள்.
சிஸ்டம் ரீஸ்டோர்(System Restore) என்பது
குறிப்பிட்ட கடந்த கால எல்லைக்கு கணினியை இட்டுச் செல்தல் ஆகும்.குறிப்பாக ஏதாவது சாஃப்ட்வேர்
இன்ஸ்டால் செய்யும் பொழுது சிஸ்டம் தானாகவே ரீஸ்டோர் பாயிண்ட்களை உருவாக்கும். இன்ஸ்டாலேசனில்
சிஸ்டத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் கணினியை பழைய நிலைக்கு ரீஸ்டோர் செய்து
கொள்ளலாம்.
ரீஸ்டோர் செய்ய அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்டிற்கு
மாறிக்கொள்ளவும்.
பிறகு கன்ட்ரோல் பேனல் சென்று System
and security என்பதை க்ளிக் செய்யவும்.பிறகு System என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது
சிஸ்டம் ப்ரடக்சன் என்பதை க்ளிக் செய்து அதில் restore என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
நமக்கு இப்பொழுது பழைய ரீஸ்டோர் பாய்ண்ட்கள் காட்டப்படும். நாம் விரும்பிய பாயிண்டை
க்ளிக் செய்து பழைய நிலைக்கு செல்லலாம்.
(எச்சரிக்கை:ரீஸ்டோர் செயத பாய்ண்டிற்கு
பிறகு நாம் உருவாக்கிய ஃபைல்கள் யாவும் அழிந்து போகும். சிஸ்டம் செட்டிங்கும் மாறி
விடும்)
மேற்கண்ட முறையை நான் பின்பற்றிய பொழுது
எனக்கு நெட் கனக்டிவிட்டி மீண்டும் கிடைத்தது.
சினேகாவிற்கு நன்றி கூறிவிட்டு நான் நெட்டில் மீண்டும் ப்ரவுசிங்கை
தொடர்ந்தேன்.
-------நன்றி முத்து கார்த்திகேயன் மதுரை
No comments:
Post a Comment