இரண்டு வருடத்திற்கு
முன்பு நடந்த ஒரு சம்பவம்.கம்ப்யூட்டரில் எந்த லிங்கை க்ளிக் செய்தாலும் அது முதலில்
ஒரு விளம்பர பக்கத்திற்கு என்னை இட்டுச் சென்றது.அதற்குப் பிறகே நான் விரும்பிய பக்கத்திற்கு
சென்றது.
வெவ்வேறு ப்ரவுசர்கள்
உபயோத்து பார்த்தும் அதே நிலைமை. சர்வீஸ் ப்ரவைடரை தொடர்வு கொண்ட போது பொறியாளரை அனுப்புவதாகச்
சொன்னார்கள். அவர் வந்து பார்த்து விட்டு என் கணினியில் download managar போன்ற தேவையற்ற
சாஃப்ட்வேர்களை என் கணினியில் இன்ஸ்டால் செய்திருந்த்ததாகவும் அதன் விளைவாகவே ஏதோ ஆட்வேர்
என் கணினியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி விட்டார். இதற்கு தீர்வாக சிஸ்டமை
ஃபார்மட் செய்யச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
பின்பு ஃபார்மட்
செய்த பிறகே அந்த தொல்லை நீங்கியது.
இப்போது அது தொடர்பான
செய்தி ஒன்று 24.10.2017 தேதியிட்ட டெக்கன் க்ரானிகிள் இதழில் வந்திருந்தது.கூகிள்
க்ரோம் ஆனது இந்த தொல்லையிலிருந்து உங்களை விடுவிக்கின்றது என்ற செய்தி. இது பயனரின்
சம்மதிமின்றி ஏதாவது மென்பொருள் நிறுவப்பட்டிருந்தால் அதன் செட்டிங்க்ஸில் ரீஸ்டோர்
செய்யும் ஆப்சன் இருப்பதான தகவல் அது.
கூகிள் க்ரோமில்
பயனர் அனுமதியின்றி ஏதாவது எக்ஸ்டென்சன் செட்டிங்கிஸில் மாற்றம் செய்திருந்தால் அதுவே
கண்டறிந்து விடும்.குரோம் ப்ரவுசர் ஆனது ஏற்கனவே
மில்லியன் கணக்கான நபர்களை இந்த சிக்கலில் இருந்து விடுவித்திருக்கின்றது.
நாம் ஏதாவது மென்பொருளை
இனையத்தில் இருந்து டவுன் லோட் செய்து நிறுவினால் அது நமக்கு தேவையற்ற கூடுதல் மென்பொருட்களை
நம் அனுமதியின்றி நிறுவும். கூகுள் குரோமின் புதிய டூலானது அது போன்ற சமயங்களில் அவற்றை கண்டறிந்து அதை நீக்குகின்றது.
இந்த வசதிகள் உங்களுக்கு
வேண்டுமென்றால் இனையத்தில் கூகிள் குரோம் பிரவுசரை அப்டேட் செய்யுங்கள்.
-----நன்றி மீண்டும்
சந்திப்போம்.
முத்து கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment