Sunday, October 22, 2017

SQL டேட்டா பேஸ் மற்றும் டேபிள்கள்:


பொதுவாக ஒரு டேபிள் என்பது ரோ, மற்றும் காலம்ன் அடிப்படையிலான தகவல்கள் சேமிப்பு ஆகும். தகவல் என்றால் எதைப் பற்றி வேண்டுமானாளும் இருக்கலாம்.ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களை பற்றியோ அல்ல்து ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பற்றியோ இருக்கலாம்.
ஒரு column என்பது எந்தெந்த தலைப்பில் ஒரு பொருள் பற்றி நாம் தகவல் சேமிக்கப் போகின்றோம் என்பது.
உதாரணமாக ஒரு கணினி பயிற்றுவகத்தில் கல்வி கற்றுக்கொள்ளும் மாணவர்களை பற்றி எடுத்துக் கொள்வோம். நாம் அந்த மாணவரின் id, name, course, mark ஆகிய தலைப்பில் தகவல்களை சேமிக்கப்போகின்றோம்.
Id
Name
Course
Mark
101
Ram
C,C++
87
102
Ravi
Java
93
103
Rani
Tally
92
104
Kumar
Dot Net
89

மேலே உள்ள டேபிளில் உள்ள ஒவ்வொரு ரோவும் ஒவ்வொரு மாணவனைப் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. இந்த டேபிளின் primary key என்பது id ஆகும். ஒரு டேபிளின் primary key ஆனது not null ஆகவும் unique ஆகவும் இருக்க வேண்டும். மேலே உள்ள டேபிளில் name எங்கின்ற தலைப்பில்லான டேட்டாவை primary key ஆக அறிவிக்க இயலாது. ஏனெனில்  ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பயிலகத்தில் கற்கலாம்.
ஒரு டேட்டா பேஸ் ஆனது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட டேபிள்களின் தொகுப்பாகும். உதாரணத்திற்கு ஒரு டேபிளானது ஒரு மாணவனின் mark பற்றிய தகவல்களையும் மற்றொரு டேபிளானது அவரின் முகவரி பற்றிய தகவல்களையும் கொடிருக்கலாம்.
முதலில் டேட்டா பேஸை உருவாக்க வேண்டும். அதற்கு create database command உதவி புரிகின்றது.
.உதாரணமாக student எங்கின்ற டேட்டா பேஸை உருவாக்க பின் வரும் குவரியை பயன்படுத்தலாம்.
Create database student;
குறிப்பு:
ஆரக்கிளில் டேட்டா பேஸை உருவாக்காமல் நேரடியாக டேபிள்களை உருவாக்கலாம்.
அந்த  டேட்டா பேஸை உபயோகத்தில் கொண்டு வர use database எங்கின்ற command உபயோகப்படுகின்றது.
சான்று:
Use database student;
ஒரு டேட்டா பேஸை டெலீட் செய்ய drop database command பயன்படுகின்றது.
சான்று:
Drop database student;
My sql database மென்பொருளானது rename என்கின்ற command உபயோகிக்கின்றது.
சான்று:
Rename database student to student1;
Sqlserver database மென்பொருளானது alter என்கின்ற கமாண்டை பன்படுத்துகின்றது.
சான்று:
Alter database student modify name=student1;
அல்லது sp_renamedb என்கின்ற ஸ்டோர்டு ப்ரொசீசரை பயன் படுத்தலாம்.
சான்று:
Exec sp_renamedb ‘student’,’student1’;

டேபிள்கள்:
டேபிள்களை உருவாக்க create table என்கின்ற command பயன்படுகின்றது.
ஒரு டேபிளை உருவாக்கும் பொழுது அது எந்தெந்த தலைப்பில் டேட்டா சேமிக்க வேண்டும் மற்றும் அந்த தலைப்பானது எந்த வகையான டேட்டாவை சேமிக்க வேண்டும,. எது ப்ரைமரி கீ போன்ற தகவல்களையும். .
வேண்டும்.
சான்று:
1.    SQL> CREATE TABLE STUDENTS (  
2.    ID INT            PRIMARY KEY,             ,  
3.    NAME VARCHAR (20) NOT NULL,  
4.    AGE INT                         NOT NULL,  
5.    ADDRESS CHAR (25) );  
டேபிளை டெலீட் செய்வதற்கு drop table என்கின்ற command பயன்படுகின்றது.
சான்று:
drop table students;

ஒரு டேபிளின் கட்டமைப்பு(structure) டெலீட் பண்ணப்படாமல் டேட்டாவை மட்டும் டெலீட் செய்வதற்கு delete மற்றும் truncate command பயன்படுகின்றது.

சான்று:
Delete from table students;
truncate  table students;
delete மற்றும் trunk வேறுபாடுகள்:
இந்த இரண்டு கட்டளைகளும் ஒரே நோக்கத்திற்கு பயன்பட்டாலும் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு delete உபயொகிக்கும் போது நிபந்தனைகள் மூலம் குறிப்பிட்ட rows மட்டும் டெலீட் செய்யலாம்.
சான்று:
Delete from table students where id=”102”;
டேபிளின் பெயரை மாற்றி அமைக்க rename command பயன்படுகின்றது
சான்று:
alter table students rename to students1;

alter table command மூலம் டேபிளில் புதிதாக column சேர்த்துக் கொள்ளலாம், column ஒன்றை drop செய்யலாம். primary key ,foreign key சேர்த்துக் கொள்ளலாம்.

சான்று:
Alter table student add(contactno,varchar(20);
---நன்றி
To learn programming courses in Madurai area.contact:91 96293 29142

                                           -----முத்து கார்த்திகேயன் ,மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment