சரவணன் காரை ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தான். நான் அவன்
அருகில் அமர்திருந்தேன். பைத்தான் மொழியையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய எனக்கு அது
ஒரு நல்ல தருணமாயிருந்தது.
“பைத்தான் மொழிக்கு
என்ன எடிட்டர் நன்று?”
“liclipse நன்று.
எனினும் என் வாக்கு pycharm-க்கு தான்.”
“பைத்தான் மொழியை
அறிய பைத்தான் 3 –ல் இருந்து ஆரம்பிக்கலாமா அல்ல்து வெர்சன் -2-ல் இருந்தே படிக்க வேண்டுமா?”
“பைத்தான் 2 –ல்
இருந்து பைத்தான் -3 ஆனது ஆப்ஜெக்ட் ஒரியண்டட் கருத்துகளை உள்ளடக்கியது என்ற விசயத்தில்
வேறுபடுகின்றது.மற்ற படி பைத்தான் 3-ல் இருந்தே படிக்கலாம்”
“பைத்தான் மொழி
படிப்பதற்கு முன் எந்தெந்த மொழிகள் தெரிந்தால் நன்றாயிருக்கும்.”
“எந்த ஒரு மொழிக்கும்
அதை படிப்பதற்கு முன் வேறொரு மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பைத்தான் மொழியை
நீங்கள் நேடியாகாகவே கற்கலாம்.. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஸ்டேட்ஸில் நிறைய பல்கலைகழகங்களில்
முதல் செமஸ்டெரிலேயே பைத்தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள்”
“பைத்தான் அறிந்த
பிறகு நேரடியாக வேலைக்குச் செல்லலாமா? அல்லது வேறு ஏதும் படிக்க வேண்டுமா?”
“வேறு எதுவும்
படிக்கத் தேவையில்லை. ஆனால் நிறைய ப்ராஜெக்ட் பண்ணிய அறிவு மிகவும் தேவைப்படும்”.
“என்னென்ன மாதிரியான
ப்ராஜெக்டுகள்?”
“பைத்தானை உபயோகித்து
மெசின் கோடிங் எழுதலாம்.வெப் டெவலெப்மென்ட் பண்ணலாம்.. நீங்கள் விரும்பிய வகையில் சொந்தமாய்
பண்ணி பழக வேண்டும். Youtube ஆனது பைத்தானால் செய்யப்பட்டதே.”
“பைத்தான் கற்றுக்
கொண்டால் இன்னும் ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு வேறு எதுவும் படிக்க வேண்டிய அவசியமில்லையா?”
“ஐ.டி இண்டஸ்டிரியை
பொருத்த வரை எதுவும் நிலையானதில்லை. நீங்கள் உங்கள் பிழைப்பை ஓட்டுவதற்கு ஒரே ஒரு மொழியை
சார்ந்திருந்தால் பத்தாது. எனினும் இன்னும் சில வருடங்களுக்கு பைத்தானுக்கு நல்ல மார்க்கெட்
இருக்கும்.”
சொல்லிய படியே சரவணன் ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்த்தான்.
எனக்கும் சில விசயத்தில் தெளிவு ஏற்பட்டால் போல் இருந்தது.
No comments:
Post a Comment