டைப்ஸ்கிரிப்ட் என்பது என்ன?
ஜாவாஸ்கிரிடிப்டில் மிகப்பெரிய நிரல்களை கையாளுவது கடினமாகும்.
இன்றைய நிலையில் ஜாவாஸ்கிரிப்டில் சிறந்த UI அனுபவத்திற்காக
நிறைய நிரல்கள் எழுதுகின்றோம்.மேலும் ஜாவாஸ்கிரிப்ட்களான ஃப்ரேம்வொர்க்குகளான ஆங்குலர், பேக்போன் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம். கிளையண்ட் சைட் கோடிங்கில் டைப்ஸ்கிரிப்டில் நிரல் எழுதுவது பிராஜெக்டை நிர்வாகிப்பதை எளிதாக்குகின்றது.
டைப் ஸ்கிரிப்ட் அம்சங்கள்.
- டைப்ஸ்கிரிப்ட் என்பது ஓபன் சோர்ஸ் ப்ரோக்ரோமிங்க் ஒளியாகும். இது மைக்ரோசாஃப்டால் உருவாக்கப்பட்டு நிர்வாக்கிகப்பட்டு வருகின்றது.
- இது ஜாவாஸ்கிரிப்ட்டின் சூப்பர்செட் ஆகும்.இதனால் ஜாவாஸ்ரிப்ட் மொழியை நீங்கள் நேரடியாக டைப்ஸ்கிரிப்ட்டில் எழுதலாம்.
- இக்காலத்தைய பிரவுசர்கள் ES 5 ஆதரிக்கின்றது.(Ecmascript 5 என்பது ஜாவாஸ்கிரிப்டின் தற்போதைய நிலையாகும்.
- இது ஜாவாஸ்கிரிப்ட்டிற்க்கு ஸ்டேட்டிக் டைப்பிங்கையும் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மொழியையும் தருகின்றது.
- ஆங்குலர் 2 ஆனது ஜாவாஸ்கிரிப்டால் எழுதப்பட்டது.
- கீழ்வரும் எடிட்டர்கள் டைப்ஸ்கிரிப்டை ஆதரிக்கின்றது.
- VisualStudio.
- Node.js
- SublimeEditor
- TypeScript play ground
டைப்ஸ்கிரிப்ட் எவ்வாறு இயங்குகின்றது?
டைப்ஸ்கிரிப்ட் கம்பைலர் ஆனது டைப்ஸ்கிரிப்ட் நிரலை ஜாவாஸ்கிரிப்ட் ஆக மாற்றுகின்றது.
நிரலை புரிந்து கொள்ளுதல்.
vs 2013 ஆனது டைப்ஸ்கிரிப்ட் கம்பைலரை தானாகவே கொண்டுள்ளது.
"WebEssentials" என்பது விசுவல்ஸ்டுடியோவில் இன்ஸ்டால் செய்தல் கூடுதல் டைப்ஸ்கிரிப்ட் சப்போர்ட் செய்கின்றது.
விசுவல்ஸ்டுடியோவை ஓபன் செய்து ASP.NET Empty Web Application என்ற ப்ராஜெக்டை உருவாக்கவும்.
அதன் பிறகு ஒரு HTML ஃபைலை ஆட் செய்து கொள்ளவும்.
புதிய டைப்ஸ்கிரிப்ட் ஃபைலை சேர்த்து கொள்ளவும். அதற்கு typescriptDemo.ts என பெயரிடவும்.
பிறகு “typescriptDemo.ts” ஐ visual studio ஆனதில் ஓபன் செய்து Movie என்றொரு கிளாசை உருவாக்கவும் இதில் name என்ற ஒரு field ,ஒரு கன்ஸ்ட்ரக்டர் (name என்பதை parameter ஆக ஏற்குமாறு) மற்றும் play() என்ற ஃபங்க்சன் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.
இதில் மூவி பெயரை ஸ்ட்ரிங்க் ஆக கொடுத்துள்ளோம். மேலும் கன்ஸ்ட்ரக்டரும் ஸ்ட்ரிங்க் டைப்பையே ஏற்கின்றது இது டைப்ஸ்கிரிப்டின் கூடுதல் நண்மை ஆகும் .அதாவது ஒரு இன்ட் ஆர்க்கியூமெண்டை அனுப்பினால் பிழை சுட்டுகின்றது. இது டைப் சேஃப்டியை வழங்குகின்றது.
இப்போது டைப்ஸ்கிரிப்ட் ஃபைலை சேவ் செய்தால் அது அதை பெயரில் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் ஃபைலை உருவாக்குகின்றது. இதையும் நீங்கள் ப்ராஜெக்டுடன் சேர்த்துக் கொள்ளவும்.
கீழே உள்ளது கம்பைலரால் உருவாக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் ஃபைல் ஆகும்.
“typescriptDemo.js” என்பதை Index.html பக்கத்தில் இனைத்து நிரல் எழுதவும் இப்பொழுது நிரலை இயக்கினால் அலெர்ட் பாக்ஸ் காட்டப்படும். இப்பொழுது ஜாவாஸ்கிரிப்டில் oops கான்செப்டின் அனுபவங்களை உணரலாம்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment