mvc என்பது பயனர் இடைமுகப்பு உருவாக்க உதவும் ஆர்க்கிடெக்சரல் டிசைன் பேட்டர்ன் ஆகும்.இவற்றின் பயன்கள்
1. நிர்வாகிப்பது எளிது.
2. திரும்ப பயன்படுத்த தக்கது.
3. பரிசோதிக்க வல்லது.
MVC என்பது MODEL, VIEW மற்றும் CONTROLLER என்பதாகும். இது பயன்பாட்டை மூன்றாக பிரிக்கின்றது.
அவை
1 .MODEL
2. VIEW
3. CONTROLLER
இவற்றைப்பற்றி ஒன்றொன்றய் பார்ப்போம்.
டிசைன் பேட்டர்ன் என்பது என்ன?
டிசைன் பேட்டர்ன் என்பது சாஃப்ட்வேர் உருவாக்கும் பொழுது வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஆகும்.
இது எளிதாக பிரச்சனைகள் தீர்க்கக் வல்லது.
சான்று:
Example of design pattern
- MVC
- Proxy
- Singleton
- Iterator
- DAO
ASP.NET MVC
ASP.NET MVC என்பது மைரோசாஃப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட்ட வெப் ஃப்ரேம் வொர்க் ஆகும்
ASP.NET MVC பயன்கள்.
கோட் பிரிக்கப்படுதல்.
1. இது ப்ரசெண்டேசன் லாஜிக்கை டேட்டா பேஸ் சார்ந்த லாஜிக்கில் இருந்து பிரிக்கின்றது.
2. இது செயற்பாட்டை மாடல், வியூ, கண்ட் ரோலர் என மூன்றாய் பிரிக்கின்றது.
லூஸ்லி கப்லிங்க்
1. டிபெண்டன்சி குறைகின்றது.
2. வியூ ஆனது மாடல்களை சார்ந்திருத்த;ல் குறைகின்றது.
3. எளிதாக எடிட் செய்ய, விரிவாக்க, மேம்படுத்த உதவுகின்றது.
பேரலல் டெவலப்மென்ட்
1. மாடல், வியூ இரண்டையும் ஒரே நேரத்தில் டெவலப் செய்யலாம்.
2. அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலாளர்கள் ஒரே நேரத்தில் ஒரே பிராஜெக்டை உருவாக்கலாம்.
3. இது பிராஜெக்டை விரைவாகவும் எளிதாகவும் உருவாக்க பயன்படுகின்றது.
யுனிட் டெஸ்டிங்க்.
1. இது பயன்பாட்டின் ஒரு பகுதியை மட்டும் டெஸ்ட் செய்ய ஏற்றது.
2. எளிதாக யுனிட் டெஸ்டிங்க் செய்யலாம்
TDD (Test Driven Development)
1. TDD டெஸ்டெர்ஸ் டெவலப்மெண்ட் வேலையால் வழிநடத்தப்படுகின்றார்கள்.
2. MVC ஆனது TDD உடன் மிகவும் சுலபமாய் இயங்கும் . நிரலின் எந்த பகுதியையும் எளிதாய் மாற்றம் செய்யலாம்.
Model
- Model என்பது சாதாரணமான சி சார்ப் கிளாஸ் ஆகும்.
- இது டேட்டாவையும் பிஸினஸ் லாஜிக்கையும் கையாள பயன்படுகின்றது
- இது டேட்டா பேஸ் சார்ந்த மாற்றங்களை கையாள பயன்படுகின்றது.
மாடல் சான்று
namespace MVCDemo.Models
{
public class Employee
{
public int EmpId { get; set; }
public string Name { get; set; }
public string Email { get; set; }
public double Salary { get; set; }
}
}
View
- இது யூசர் இன்டெர்பேஸ்களை உருவாக்கப் பயன்படுகின்றது.
- இது மாடலில் இருந்து கிடைக்கப்பட்ட டேட்டாவை காட்சிபடுத்துகின்றது.
- இது html template ஆகும் இது html கண்ட் ரோல்களை டேட்டாவுடன் பைண்ட் செய்கின்றது.
- .cshtml ஃபைல் Razor view engine என்படுத்துகின்றது. இது சிசார்ப்பை உபயோக்க்கின்றது
- வியூ ஆனது கீழ்வரும் எக்ஸ்டென்களை பயன்படுத்துகின்றது.
- .aspx
- .asp
- .html
- .cshtml
- .vbhtml
வியூ வகைகள்
- Layout View
- Partial view
- Normal view
Controller
- கண்ட் ரோல்கள் ஆக்சன் மெத்தட் அல்லது ஆக்சன் அற்ற மெத்தட்கள் இரண்டையுமே பயன்படுத்துகின்றது.
- இது யூசரிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கையாளுகின்றது.
- இது ஆக்சன் மெத்தடை இயக்கி டேட்டாவை மாடலில் இருந்து பெற்று அதற்குண்டான வியூவை காட்சிப்படுத்துகின்றது.
- இது controllerBase கிளாசை இன்ஹெரிட் செய்கின்றது. மேற்கொண்ட ஃபைல் “System.Web.Mvc” என்ற நேம் பேசில் உள்ளது.
- ஒரு கன்ட் ரோலர் பெயர் "controller" என்ற சஃப்ஃபிக்ஸ் உடன் இருக்க வேண்டும்.
கண்ட் ரோலர் சான்று நிரல்
namespace MVCDemo.Controllers
{
public class HomeController : Controller
{
// GET: Home
public ActionResult Index()
{
return View();
}
}
}
Following are diagrams of ASP.NET MVC,
மேலே உள்ள படத்தின் படி யூசர் கோரிக்கையை URL ஆக இடுகின்றார்கள். இது ரௌடிங்க் செய்யப்பட்டு அதற்குரிய கண்ட் ரோலை சென்றடைகின்றது. . பிறகு அதற்குரிய ஆக்சன் மெத்தடை இயக்குகின்றது.இது மாடலுக்கு கோரிக்கையை அனுப்புகின்றது.அது டேட்டா பேசில் இருந்து டேட்டாவை அனுப்புகின்றது. பிறகு அதற்குரிய வியூ இயக்கப்பட்டு டேட்டாவானது காட்சி படுத்தப்படுகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment