இந்த பயன்பாட்டில் ஒரு பீட்சா கம்பனிக்கு நிரல் எழுத இருக்கின்றோம்.
முதலில் அதன் அளவு என்ன என்று கேட்டுப் பெறுகின்றோம். அதற்கு பிறகு பெப்பரானி சேர்க்க வேண்டுமா என கேட்கின்றோம். அவ்வாறு சேர்க்கப்படும் பட்சத்தில் பீட்சாவின் அளவைப் பொறுத்து கூடுதல் தொகை சேர்க்கின்றோம்.
அதற்கு பிறகு கூடுதல் சீஸ் சேர்க்க வேண்டுமா என்று கேட்டு அதனுடைய் தொகையும் பில்லில் சேர்க்கின்றோம்.
size=input("Enter size of pizza s for small m for medium l for large")
billAmount=0
if size=="s":
billAmount+=15
elif size=="m":
billAmount+=20
else:
billAmount+=25
addPepperoni=input("Add pepperoni y for yes n for no")
if addPepperoni=="y":
if size=="s":
billAmount+=2
else:
billAmount+=3
addExtraCheese=input("Add Extra cheese for pizza y for yes n for no")
if addExtraCheese=="y":
billAmount+=1
print(f"the total bill is ${billAmount}")
வெளியீடு:
Enter size of pizza s for small m for medium l for largem
Add pepperoni y for yes n for noy
Add Extra cheese for pizza y for yes n for noy
the total bill is $24
முதலில் அதன் அளவு கேட்கப்படுகின்றது. அது if elif மூலம்
சரி பார்ர்க்கப்படுகின்றது. அதற்கேற்றாற்போல் s எனில் 15 டாலரும் m
எனில் 20 டாலரும் l எனில் 25 டாலரும் தொகையுடன் சேர்க்கப்படுகின்றது
.
அடுத்து பெப்பரானி சேர்க்கப்பட வேண்டுமெனில் s எனில் 2 டாலரும் m
அல்லது l எனில் 3 டாலரும் தொகையுடன் சேர்க்கப்படுகின்றது.
அடுத்து கூடுதல் சீஸ் சேர்க்க வேண்டுமெனில் தொகையுடன் 1 டாலர்
சேர்க்கப்படுகின்றது.
நன்றி முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment