ஆங்குலர்
என்பது கிளையண்ட் பக்க வெப் பயன்பாடுகள் உருவாக்குவதற்கான பிரபலமான ஜாவா ஸ்கிரிப்ட்
பிரேம் வொர்க் ஆகும்.
இந்த ஃப்ரேம்
வொர்க் ஆனது டைனமிக் வெப் பயன்பாடுகள் உருவாக்கப் பயன்படக் கூடிய திரும்ப பயன்படுத்தக்
கூடிய மெத்தடுகள், கிளாஸ்கள், இன்டெர்ஃபேஸ்கள் ஆகியவற்றைத் தருகின்றது.
பொதுவாக
ஆங்குலரை சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் உருவாக்குவதற்கு பயன்படுத்துகின்றோம்.
ஆங்குலரை
மொபைல் மற்றும் டெஸ்க் டாப் சிங்கிள் பக்க பயன்பாடுகள் உருவாக்குவதற்கும் பயன்படுத்துகின்றோம்.
ஆங்குலரை நாம்
Html, css மற்றும்
ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது டைப் ஸ்கிரிப்ட் பயன்படுத்தி கிளையண்ட் பக்க பயன்பாடுகள் உருவாக்குகின்றோம்.
ஆங்குலர் என்பது ஜாவாஸ்கிரிப்ட் போன்று நிரலாக்க மொழி அல்ல.
ஆங்குலர் என்பது சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் உருவாக்க உதவும்
ஜாவா ஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க் ஆகும்.
ஃப்ரேம் வொர்க் என்பது என்ன?
ஃப்ரேம் வொர்க் என்பது சாஃப்ட்வேர் பயன்பாடுகள் உருவாக்குவதற்கான
ப்ளாட்ஃபார்ம் போன்றது.
இது ஒரு நிரலை தொடக்கத்தில் இருந்து எழுதாமல் முன் கூட்டியே
எழுதப்பட்ட திரும்ப பயன்படக்கூடிய கிளாஸ்கள்,
மெத்தட்கள் ஆகியவற்றை பயன்படுத்துதல் ஆகும்.
பொதுவாக நாம் கிளையண்டில் இருந்து ஒரு ரெக்குவஸ்ட் அனுப்புகின்றோம்.
சர்வர் அதற்கு பதிலுக்கு ரெஸ்பான்ஸ் அனுப்புகின்ற்து.
இதை ஜாவா ஸ்கிரிப்டில் எழுதினால் நிறைய கோடிங்க் எழுத வேண்டியிருக்கும்.
ஆங்குலர் போன்ற ஃப்ரேம் வொர்க் பயன்படுத்தி சர்வருடன் கனக்ட் செய்ய கிளாஸ்கள் பயன்படுத்துதல்
போன்ற செயல்பாடுகள் மூலம் எளிதாகின்றது.
ஃப்ரேம் வொர்க் என்பது முன் கூட்டியே எழுதப்பட்ட கிளாஸ்கள்,
மெத்தடுகள் மூலம் பயன்பாட்டில் வித்தியாசமான செயல்களை எளிதாக செய்யக்கூடிய APIகளை தருவதாகும்.
நேவிக்கேட்டரில்
ஹோம் பட்டனை கிளிக் செய்தால் பாடி மட்டுமே மாறும் பக்கம் முழுவதும் ரிலோட் ஆவதில்லை.
பக்கம் index.html ஆகும்.
அபோட் பட்டனை
கிளிக் செய்தால் மறுபடியும் பாடி மட்டும் மாறுகின்றது. பேஜ் ரிலோட் ஆவதில்லை. இப்பொழுதும்
பக்கம் index.html தான் ஆகும்.
உள்ளடக்கம்
ஆனது ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி டைனமிக் ஆக மாறுகின்றது.
இங்கே சர்வரில்
இருந்து எந்த டேட்டாவையும் ரிகுவெஸ்ட் செய்யவில்லை.ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தியே கண்டண்ட்
மாறுகின்றது.சர்வருக்கு எந்த ரிகுவெஸ்டும் அனுப்பாததால் பேஜ் ரிஃப்ரெஸ் ஆவதில்லை.
சிங்கிள் பேஜ் பயன்பாட்டின் நண்மை என்ன?
ஜாவாஸ்கிரிப்டை
பயன்படுத்தி கண்டண்டை மாற்றுவதால் இது வேகமாக இருக்கின்றது.ஒவ்வொரு தடவையும் சர்வருக்கு
கோரிக்கை அனுப்பாததால் இது விரைவாகவும் ரியாக்டிவ் ஆகவும் உள்ளது.
சர்வரில்
இருந்து டேட்டா தேவைப்பட்டால் பின்னனியில் லோட் ஆகின்றது.அதன் பிறகு டேட்டா காட்சிபடுத்தப்படுகின்றது.
ஜாவாஸ்கிரிப்ட்
மற்றும் ஜெகொரியின் கட்டுப்பாடுகள்.
ஜாவாஸ்கிரிப்ட்
அல்லது ஜெகொரி ஆனது நிர்வாகிக்க கடினமானதாகும் சரியான முறையில் பயன்பாட்டை கட்டமைக்க
வேண்டியிருக்கின்றது.
தொடக்கத்தில்
இருந்து நாம் ஒவ்வொன்றுக்கும் நாம் நிரல் எழுத வேண்டியிருக்கின்றது.
இதன் காரணமாக
சமீப காலமாக விரைவாக பயன்பாடுகளை உருவாகுவதற்கு நிறைய ஃபரேம் வொர்க்குகள் உருவாக்கப்ட்டன.
ஆங்குலர் அதில் பிரபலமான ஒன்றாகும்.
ஆங்குலரின் நண்மைகள்.
ஆங்குலர்
தெளிவான லூஸ்லி கப்பிள்டு பயன்பாடுகள் உருவாக்குவதற்கு பயன்படுகின்றது.
இது நிறைய
உடிலிட்டி கோடை(utility code) தருகின்றது.இதை பயன்பாடுகளில் மறுபடியும் பயன்படுத்துகின்றோம்.
ஆங்குலரில்
உருவாக்க்கப்பட்ட ஒரு பயன்பாடானது சாஃப்ட்வேர் டெஸ்டிங்கிற்கு ஏற்றதாக உள்ளது.
கடந்த சில
ஆண்டுகளாக ஆங்குலரில் நிறைய வெர்சன்கள் வெளிவந்துள்ளன.
2010-ல்
ஆங்குலர் ஜெ எஸ் என்ற பெயரில் முதல் வெர்சன் வெளிவந்தது.எனினும் இது இன்றைய பயன்பாட்டுகளுக்கு
ஏற்றதாக இல்லை. அது நிறைவானதாகவும் இல்லை.
எனவே அதை
மொத்தமாக மாற்றி எழுதி 2016 ஆங்குலர் என்ற பெயரில் அதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது.
இது ஜாவா ஸ்கிரிப்டிற்குப்பதில் அதன் சூப்பர் செட் ஆன டைப் ஸ்கிரிப்டை பயன்படுத்துகின்றது.
கவனிக்கவும் இப்பொழுது அதன் பெயர் ஆங்குலர் தானே அன்றி ஆங்குலர் ஜெ எஸ் அல்ல.
ஆங்குலர்
ஜெ எஸ்ஸும் ஆங்குலரும் முற்றிலும் மாறுபட்டதாகும்.
ஆறு மாதத்திற்கு
ஒரு முறை ஒரு புதிய வெர்சன் வெளிவருகின்றது.. இதில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு
எழுதப்பட்டுள்ளது.ஆங்குலர் 16 லேட்டஸ்ட் வெர்சன் ஆகும்.
-தொடரும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்
,மதுரை.
No comments:
Post a Comment