Tuesday, March 13, 2018

ஜாவாவில் மல்டி திரட்டிங்க் –பகுதி-2




Thread கிளாஸ்.
Java.lang.Thread கிளாஸ் ஆனது ஒரு திரட்டை உருவாக்கவும் மற்றும் ஒரு திரட்டை ஆக்சஸ் செய்யவும் பயன்படுகின்றது. Thread class அல்லது Runnable interface பயன்படுத்தி ஒரு மல்டி திரட் அப்ளிகேசனை உருவாக்கலாம்.
Thread கிளாஸ் ஆனது  நிறைய மெதட்களை கொண்டுள்ளது. அவற்றிலிருந்து ஒரு திரட்டின் வெவ்வேறு செயல்பாடுகள் அதாவது ஒரு திரட்டின் பண்புகளை பெறுதல், ஒரு திரட்டை குறிப்பிட்ட மணித்துளிக்கு வெய்ட் செய்யவைத்தல், அதை மீண்டும் resume செய்தல் மற்றும் ஒரு திரட்டை destroy செய்தல்.
முக்கியமான மெதட்கள்:
1.   getPriority()- ஒரு திரட்டின் பீரியாரிட்டியை ரிடர்ன் செய்கின்றது.
2.   isAlive()-ஒரு திரட் ஆனது இயங்கிக் கொண்டிருக்கின்றதா என்பதை ரிடர்ன் செய்கிறது.
3.   Sleep()-ஒரு திரட்டை குறிப்பிட்ட மணித்துளிகளுக்கு பாஸ்(pause) செய்ய பயன்படுகின்றது.
4.   getName()-ஒரு திரட்டின் பெயரை ரிடர்ன் செய்கின்றது.
5.   Start()-run()-மெத்தடை அழைப்பதன் மூலம் ஒரு திரட்டை ஸ்டார்ட் செய்கின்றது.
மெயின் திரட்
ஒரு மல்டி திரட் அப்ளிகேசனில் முதலாவது இயங்குவது மைன் திரட் ஆகும். இது ஒரு ஜாவா புரோகிராமை இயக்கும் பொழுது ஆட்டோமேடிக் ஆக இயங்குகின்றது. currentThread()- என்கின்ற மெத்தடை பயன்படுத்தி ஒரு திரட்டை ஆக்சஸ் செய்யலாம்.
சான்று நிரல்-1
/*
 * To change this license header, choose License Headers in Project Properties.
 * To change this template file, choose Tools | Templates
 * and open the template in the editor.
 */
package mainthreaddemo;

/**
 *
 * @author ABINAYA
 */
public class MainThreadDemo {

    /**
     * @param args the command line arguments
     */
    public static void main(String[] args) {
        // TODO code application logic here
        Thread t=Thread.currentThread();
        System.out.println("The current thread "+t);
        t.setName("Main Thread");
        System.out.println("the name of thread after name changing "+t);
        System.out.println("the current thread is going to sleep for 10 seconds");
        try
        {
            t.sleep(10000);
           
        }
        catch(InterruptedException e)
        {
            System.out.println("Main thread interrupted");
        }
        System.out.println("after 10 seconds the threading is exit now.");
    }
   
}
மேலே உள்ள நிரலில் setName()-மெதட் மூலம் திரட்டுக்கு பெயர் வைக்கப்படுகின்றது.மேலும் sleep()- என்கின்ற மெதட் மூலம் 10 செகண்டுகளுக்கு திரட் ஆனது pause செய்யபடுகின்றது. Sleep() மெதட் எர்ரர் பிழை சுட்டப்படலாம் என்பதற்காக try-catch block இடையே அழைக்கப்படுகிற்து
வெளியீடு:
run:
The current thread Thread[main,5,main]
the name of thread after name changing Thread[Main Thread,5,main]
the current thread is going to sleep for 10 seconds
after 10 seconds the threading is exit now.
BUILD SUCCESSFUL (total time: 10 seconds)
தொடரும்

ads Udanz

No comments:

Post a Comment