Friday, March 16, 2018

ஜாவாவில் மல்டி திரட்டிங் பகுதி-4



RUNNABLE INTERFACE –உபயோகப்படுத்தி எவ்வாறு ஜாவாவில் எவ்வாறு மல்டி திரடிங்க் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஜாவாவில் மல்டிபிள் இன்ஹெரிடன்ஸ் கிடையாது . அதாவது ஒரு கிளாஸ் ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட கிளாஸை இன்ஹெரிட் செய்ய இயலாது. பொதுவாக ஆப்லெட்கள் Applet class-யை இன்ஹெரிட் செய்யும். அதனால் thread class –யை இன்ஹெரிட் செய்ய இயலாது. அதற்கு மாற்றாக runnable இன்டெர்ஃபேஸை பயன் படுத்தலாம். ஏனெனில் ஒரு கிளாஸ் எத்தனை இன்டெர்ஃபேஸையும் இம்ப்ளிமென்ட் செய்யலாம்.
சிண்டாக்ஸ்:
Public void run()
மேலே உள்ள கோடிங்க் எவ்வாறு ரன்னபிள் இன்டெர்ஃபேஸை எவ்வாறு அறிவிப்பது என்று உள்ளது.
Start() என்கின்ற மெதடை அழைக்கும் பொழுது run() மெதட் இயங்குகின்றது.
/*
 * To change this license header, choose License Headers in Project Properties.
 * To change this template file, choose Tools | Templates
 * and open the template in the editor.
 */
package threadclass;
class NewThread implements Runnable
{
    Thread t;
    NewThread()
    {
        t=new Thread(this,"chid thread");
        System.out.println("child thread:"+t);
        t.start();
    }
    public void run()
    {
        System.out.println("child thread started");
        System.out.println("Exiting child thread");
    }
}
   
   
   
   
   

/**
 *
 * @author ABINAYA
 */
public class ThreadClass {

    /**
     * @param args the command line arguments
     */
    public static void main(String[] args) {
       new NewThread();
       System.out.println("Main thread started");
       try
       {
           Thread.sleep(5000);
          
       }
       catch(InterruptedException e)
               {
                 System.out.println("The main thread interrupted")  ;
                
               }
       System.out.println("Exiting the main thread");
    }
   
}
வெளியீடு:
run:
child thread:Thread[chid thread,5,main]
Main thread started
child thread started
Exiting child thread
Exiting the main thread
BUILD SUCCESSFUL (total time: 5 seconds)
மேலே உள்ள நிரலில் NewThread கிளாஸில் அதன் கன்ஸ்ட்ரக்டர் this, child thread என்கின்ற இரு ஆர்க்யூமெண்ட்களை பயன்படுத்தி ஒரு புதிய திரட்டை உருவாக்குகின்றது. அந்த புதிய திரட்டின் பெயர் childthread என உள்ளது. Start() மெதட் run() என்கின்ற மெதடை அழைக்கின்றது. அதற்கு கண்ட்ரோல் மெயின் திரட்டிற்கு மாறுகின்றது. மெயின் திரட் 5 செகண்டிற்கு ஸ்லீப் செய்கின்றது. அத்துடன் பிறகு மெயின் திரட்டும் முடிகின்றது.
-தொடரும்
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment