நானே கேள்வி நானே பதில்.
Exe என்பது எக்ஸிக்யூடபிள்
ஃபைல் ஆகும். Dll என்பது டைனமிக் லிங்க் லைப்ரேரி ஆகும். Exe என்பது தனித்தும் இயங்கும்
அதே நேரத்தில் மற்ற ஃபைலுடன் சேர்ந்தும் இயங்கும். Dll ஃபைல் எப்பொழுது தனித்து இயங்காது.
மற்ற ஃபைலுடன் சேர்ந்தே இயங்கும். நாம் டாட்நெட்டில் விண்டோஸ் அப்ளிகேசன், wpf அப்ளிகேசன்,
கன்சோல் அப்ளிகேசன் ஆகியவற்றில் கோடிங் எழுதி கம்பைல் செய்யும் பொழுது exe ஃபைல் உருவாகின்றது.
இந்த exe ஃபைலை தனித்து இயக்கலாம்.ஆனால் விண்டோஸ் கிளாஸ்லைப்ரேரி அல்லது விண்டோஸ் கண்ட்ரோல்
லைப்ரேரி ஆகியவற்றில் எழுதிய ஃபைலை கம்பைல் செய்யும் பொழுது dll ஃபைல் உருவாகின்றது.
இது தனித்து இயங்காது. Dll ஃபைலில் மெய்ன் ஃபங்க்சன் இருக்காது. மற்றொரு exe ஃபைலை
சப்போர்ட் செய்யும்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment