Thursday, January 4, 2018

பிஹெஸ்பியில் டேட்டாக்களை கையாளுவது எப்படி?-பகுதி-1




டேட்டாபேஸ் என்பது என்ன்?

டேட்டாபேஸ் என்பது தகவல் தொகுப்பாகும்.ஒரே ஒரு சாஃப்ட்வேரில் சேமித்து அதை வேண்டிய பொழுது எடுத்துப் பார்க்க,அதை மாற்றியமைக்க, குறிப்பிட்ட டேட்டாவை டெலீட்(delete) செய்ய டேட்டாபேஸ் பயன்படுகின்றது. உதாரணத்துக்கு ஒரு கல்லூரியில் மாணவர்களைப் பற்றிய தகவல்களை சேமித்து நாம் விருப்யிய வண்ணம் டேட்டாக்களை கையாள முடியும்.
பேக் எண்ட் என்றால் என்ன?
‘பொதுவாக நாம் தகவல்களை டேட்டாபேஸ் சாஃப்ட்வேரில் பதிந்து வைத்திருப்போம். இவை ஆரக்கிள், எம் எஸ் எஸ் க்யூஎல் சர்வர்,மை எஸ் க்யூஎல் போன்றவையாக இருக்கலாம்.இதிலிருந்து நாம் வேண்டிய டேட்டாக்களை பெறலாம். பொதுவாக இவையே பேக் எண்டாக பயன்படுகின்றது.
ஃபிரண்ட் எண்ட் என்றால் என்ன்?
டேட்டாபேஸ்களை நாம் கையாள உதவும் இன்டர்ஃபேஸ்களை உருவாக்க உதவும் சாஃப்ட்வேரே ஃப்ரண்ட் எண்ட் எனப்படுகின்றது.இதன் மூலம் பேக் எண்டில் உள்ள அதாவது டேட்டாபேஸில் உள்ள தகவல்களை பெற,மாற்றியமைக்க, புதிதாக டேட்டாக்களை இன்செர்ட் செய்ய, ஏற்கனவே உள்ள குறிப்பிட்ட டேட்டாக்களை டெலீட் செய்யலாம். பொதுவாக VB.NET,C#,JAVA, PHP போன்ற ப்ரோக்கிராமிங் மொழிகள் ஃப்ரண்ட் என்டாக பயன்படுகின்றது.
பிஹெச்பி(PHP) என்பது என்ன?
PHP என்பது இனைய தளங்களை உருவாக்க உதவும் சர்வர் சைட் ஸ்கிரிப்டிங் மொழியாகும். இது ஃப்ரண்ட் எண்டாக பயன்படுகின்றது.நாம் இந்த தொடரில் ஒரு டேட்டா பேஸுடன் எவ்வாறு கனக்ட் செய்வது,, இன்செர்ட் செய்வது, அப்டேட் செய்வது, டெலீட் செய்வது என்பது குறித்து பார்க்க இருக்கின்றோம்.
டேட்டாபேஸ் கனக்ட் செய்வது எவ்வாறு?

mysqli_connect என்கின்ற ஃபங்க்சன் நாம் mysql டேட்டா பேஸுடன் கனெக்ட் செய்ய உதவுகின்றது..
$dbc=mysqli_connect(hostname, username, password, db_name);
முதலில் உள்ள hostname என்பது பொதுவாக localhost என இருக்கும். Username என்பது பொதுவாக root என இருக்கும். Password என்பது பொதுவாக எதுவும் இல்லாமல் இருக்கும். நான்காவது உள்ளது db_name என்பது நாம் எந்த டேட்டாபேஸுடன் கனக்ட் செய்ய விரும்புகின்றோமோ அதனுடைய பெயரைக் குறிப்பிட வேண்டும்.
கீழே உள்ளவாறு கோடிங்க் எழுதி அதை connect.php என்கின்ற பெயரில் xampp ஃபோல்டரில் உள்ள htdocs என்கின்ற ஃபோல்டருக்குள் சேவ் செய்யவும்.
<?php
DEFINE('DB_USER','root');
DEFINE('DB_PASSWORD', '');
DEFINE('DB_HOST','localhost');
DEFINE('DB_NAME', 'mydb1');
$dbc=@mysqli_connect(DB_HOST,DB_USER, DB_PASSWORD, DB_NAME) OR die('could not connect to mysql:'.mysqli_connect_error());
echo"successfully connected";
?>
Mysqli_connect என்பதிற்கு முன்னால் உள்ள @ சிம்பல் php error மெசேசை டிஸ்ப்ளே செய்யாமல் மாற்றாக நமக்கு die பகுதியில் உள்ள எர்ரர் மேசேஜ்ஜை மட்டும் காண்பிக்கும்.
இப்பொழுது நாம் பிரவுசரின் அட்ரஸ் பாரில்
Localhost/connect.php என டைப் செய்யவும்.(xamp control panel என்பதில் உள்ள apache மற்றும் mysql என்கின்ற இரு சர்வரும் start செய்யப்பட்டிருக்க வேண்டும்)
இப்பொழுது கீழே உள்ள வாறு வெளியீடு இருக்கும்.

நன்றி அடுத்த பகுதியில் தொடர்ந்து சந்திப்போம்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.


 TO LEARN PROGRAMMING LANGUAGES CONTACT ME:
MUTHU KARTHIKEYAN, 96293 29142
ads Udanz

No comments:

Post a Comment