Saturday, January 6, 2018

கண்டண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் என்றால் என்ன்?(cms)




Content Management system என்பது நம்முடைய உள்ளடக்கத்தை(content) உருவாக்கி, எடிட் செய்து, ஒன்றாக்கி பப்ளிஸ்(publish) செய்ய உதவும் மென்பொருளாகும்.இவை பெரும்பாலும் வெப் கண்டண்டை உருவாக்க உதவினாலும் இண்ட்ராநெட், மற்றும் ஆஃப் லைனிலும் பயன்படுகின்றது.
Wordpress என்கின்ற மென்பொருளானது ஃபைல்ஸ், டாக்குமென்ட்ஸ் கண்டண்டின் டிசைன் மற்றும் கண்டண்டின் டிஸ்ப்ளே முதலியவற்றை நம்முடைய கட்டுப்பாடின் கீழ் கொண்டு வருவதற்கு உதவுகின்றது. வேர்ட்பிரஸ்ஸில் நம்முடைய கண்டண்டை உருவாக்கி பப்ளிஸ் செய்ய ஒரு வரி கூட நாம் கோடிங்க் எழுத தேவையில்லை. டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட எந்த வித கற்றறிவும் இல்லாமல் நம்முடைய கண்டெனடை உருவாக்கி பப்ளிஸ் செய்ய உதவுதே கண்டண்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தின் அழகு ஆகும்.

ஆரம்ப காலத்தில் ஒரு சராசரி பயனர் அல்லது சிற்ய கம்பனிகள் ஸ்டேட்டிக் பக்கங்களிக்கு HTML –யையே சார்ந்திருந்தன. ஏனென்றால் கண்டண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டமானது அந்நாட்க:ளில் மிகவும் விலை உயந்ததாக இருந்தது. ஆனால் வேட்ர் பிரஸ்  போன்ற மென்பொருட்கள் ஒபன் சோர்ஸ் ஆக கிடைக்கின்றன.
வேர்ட்பிரஸ் ஆனது எல்லாவிதமான கிரியேட்டிவ் வகைகளிலும் பயன்படுகின்றது, சிறிய வணிக கம்பனிகளுடைய வெப்சைட்,பிளாக்,பெரிய பல்கலைகழகங்களின் வெப்சைட்கள், போர்ட்ஃபோஸ், ரீயல் எஸ்டேட் நிறுவனங்களின் சொத்து விவரங்கள், திரைப்படங்களின் டேட்டா லிஸ்ட், வெப் டைரக்டரிஸ் முதலியவற்றை திறம்பட கையாளுவதற்கு வேர்ட்பிரஸ் போன்ற கண்டண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மென்பொரிட்கள் உதவுகின்றன.
 நன்றி 
முத்து கார்த்திகேயன்,மதுரை.

to learn programming languages in madurai.
contact:91 96293 29142(Muthu karthikeyan)


ads Udanz

No comments:

Post a Comment