Tuesday, January 9, 2018

பாப் அப் ஆட்ஸ் மற்றும் பாப் இன் ஆட்சை தடுத்து நிறுத்துவது எப்படி?




நாம் இணையத்தில் வலம் வரும் பொழுது சில சமயம் உங்கள் ஸ்கிரீனில் பாப் அப் ஆட்ஸ் தோன்றும். இவை உங்களுக்கு எரிச்சலூடலாம். மேலும் எரிச்சலூட்டும் வண்ணம் விண்டோவின் கீழேயே பாப் இன் ஆட்ஸ் தோன்றலாம். இவை உங்களுக்கு கோவம் ஊட்டுவது மற்றும் இல்லாமல் உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டையும் பாதிக்கலாம்.

மகிழ்ச்சியான செய்தியென்ன என்றால் இப்பொழுதுள்ள மாடர்ன் பிரவுசர்கள் எல்லாவற்றிலும் இவற்றை தடுத்து நிறுத்த வசதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எவ்வாறு தடுத்து நிறுத்துவது எனப் பார்ப்போம்.

MICROSOFT EDGE BROWSER
இந்த பிரவுசர் விண்டோஸ் 10 உடன் சேர்ந்தே வருகின்றது. இது மைக்ரோ சாஃப்டின் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை ரீபிளேஸ்  செய்கின்றது. இதில் எவ்வாறு பாப் அப் ஆட்களை தடுக்கலாம் எனக் காண்போம்.
எட்ஜ் விண்டோவில் வலது மேற்புறம் கடைசியில் மூன்று புள்ளிகள் கொண்ட ஒரு ஐக்கான்(More Button) இருக்கும்.அதை கிளிக் செய்ய  வேண்டும்.
இப்பொழுது மெனுவின் கீழே உள்ள settings என்பதை செலக்ட் செய்யவும்.
இப்பொழுது அட்வான்ஸ் செட்டிங்க்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும். இப்பொழுது பிளாக் பாப் அப் ஆட்ஸ் என்ற ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். இது நீல நிறத்தில் மாறும் பொழுது உங்கள் செட்டிங்ஸ் டாக்கிள் ஆகும்.
இண்டர்நெட் எக்ஸ்புளோரர்.
இதில் டூல்ஸை கிளிக் செய்து ஆப்சன்ஸ் என்பதை கிளிக் செய்யவும். அதில் privacy டேப்பை கிளிக் செய்து அதில் கீழே உள்ள block popup என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது பாப் அப் ஆட்ஸ் நிறுத்தப்படும்.
மொசில்லா ஃபயர் பாக்ஸ்.
இதில் மெனு பட்டனை ( ) கிளிக் செய்து அதில் ஆப்சன்ஸ் என்பதை கிளிக் செய்யவும். திரையின் contents என்பதைக் கிளிக் செய்து அதில் block pop up windows என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது பாப் அப் ஆட்ஸ் நிறுத்தப்படும்.
கூகிள் குரோம்.
வலது மேற்புறம் கடைசியில் உள்ள மூன்று வெர்டிகள் டாட்ஸ் ஐக்கானை( ) என்பதை கிளிக் செய்யவும்.
செட்டிங்க்சை கிளிக் செய்யவும். அதில் கீழே SHOW ADVANCED SETTINGS என்பதை கிளிக் செய்யவும். பிரைவசி செக்சனில் CONTENT SETTINGS என்கின்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் POP UP செக்சனில் DO NOT ALLOW ANY SITE TO SHOW POP UPS என்பதை செக் செய்யவும். இப்பொழுது ஆட்ஸ் தடுத்து நிறுத்தப்படும்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.



TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.







ads Udanz

No comments:

Post a Comment