Friday, January 5, 2018

ஜாவாவில் இன்ஹெரிட்டன்ஸ் எவ்வாறு பயன்படுகின்றது? பகுதி-1.




ஆப்ஜெக்ட் ஒரியண்டடு புரோக்ராமிங்கின் முக்கியமான கருத்துக்களில் ஒன்று இன்ஹெரிட்டன்ஸ். இன்ஹெரிட்டன்ஸ் ஒரு கிளாஸ் ஆனது மற்றொரு கிளாஸின் மெம்பர்களை உபயோகப்படுத்திக் ,கொள்தல் ஆகும். எந்த கிளாஸ் ரீயூஸ் பண்ணப்படுகின்றதோ அது பேஸ் கிளாஸ் ஆகும். அதை ரீயூஸ் பண்ணும் கிளாஸ் டெரிவ்டு கிளாஸ் ஆகும்.
ரீயூஸ் என்பது ஜாவாவில் extends என்கின்ற கீவேர்டு மூலம் இம்ப்ளிமெண்ட் பண்ணப்படுகின்றது. டெரிவ்டு கிளாஸிகென்று தனிப்பட்ட மெத்தட்ஸ் மற்றும் ஃபீல்டுகளை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.

ஜாவாவைப் பொறுத்த வரை பேஸ் கிளாஸ் ஆனது superclass என்றும் டெரிவ்டு கிளாஸ் ஆனது sub class என்றும் அறியப்படுகின்றது.
இன்ஹெரிட்டன்ஸின் வகைகள்:
1.   சிங்கிள் இன்ஹெரிட்டன்ஸ்.
ஒரு கிளாஸை மற்றொரு கிளாஸ் இன்ஹெரிட் செய்வது சிங்கிள் இன்ஹெரிட்டன்ஸ் ஆகும்


மல்டிபிள் இன்ஹெரிட்டன்ஸ்
ஒரு கிளாஸ் ஆனது ஒன்றிற்கும் மேற்பட்ட கிளாஸ்களை இன்ஹெரிட் செய்தால் அது மல்டிபிள் இன்ஹெரிட்டன்ஸ் ஆகும்.
இந்த வகையான இன்ஹெரிட்டன்ஸ் ஜாவாவில் கிடையாது.


மல்டி லெவல் இன்ஹெரிட்டன்ஸ்.
கிளாஸ் B ஆனது கிளாஸ் A வை இன்ஹெரிட் செய்கின்றது. கிளாஸ் C ஆனது கிளாஸ் B யை இன்ஹெரிட் செய்கின்றது இந்த வகையான இன்ஹெரிட்டன்ஸ் மல்டிலெவெல் இன்ஹெரிடன்ஸ் ஆகும், இந்த வகையான இன்ஹெரிட்டன்ஸ் ஜாவாவில் உண்டு








HIERARCHICAL INHERITANCE
ஒரு பேஸ் கிளாஸ் ஒன்றுக்கும் மேற்பட்ட சப் கிளாஸ் இவ்வாறு இம்ப்ளிமெண்ட் செய்வது hierarchical inheritance ஆகும்.இது ஜாவாவில் உண்டு.


ஹைபிரிட் இண்ஹெரிட்டன்ஸ்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஹெரிட்டன்ஸ் வகைகளின் கலவை ஹைபிரிட் இன்ஹெரிட்டன்ஸ் ஆகும். இது ஜாவாவில் கிடையாது.


-----மீண்டும் இதன் இரண்டாவது பகுதியில் சந்திப்போம்.
-----முத்து கார்த்திகேயன், மதுரை
To learn programming languages contact:
Muthu karthikeyan: 96293 29142.


ads Udanz

No comments:

Post a Comment