Tuesday, January 9, 2018

பாஸ்வேர்டு மேனேஜர் என்றால் என்ன?





பொதுவாக ஆன்லைனில் இமெய்லில் இருந்து இ-காமர்ஸ் வெப் தளங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டு உபயோக்கின்றோம். ஒவ்வொன்றும் அல்பபெட்ஸ், டிஜிட்ஸ் மற்றும் ஸ்பெசல் கேரக்டர் காம்பினேசினில் இருக்கும். ஆனால் இவை ஒவ்வொன்றையும் நாம் ஞாபகம் கொள்ள இயலாது. அதற்கு உதவுவதே பாஸ்வேர்டு மேனேஜர். இதற்கு ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டு உருவாக்கி அதை நினைவில் இருத்தினாலே போதும் மற்ற தளங்களின் பாஸ்வேர்டை அதுவே மேனேஜ் செய்து கொள்ளும்.
ஆகையால் நம்முடைய பாஸ்வேர்டு ஒவ்வொன்றையும் நினைவில் இருத்திக் கொள்ள நமக்கு தேவைப்படும் டூலே பாஸ்வர்டு மேனேஜர்.
லினக்ஸ் மற்றும் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங்க் சிஸ்டத்தில் keypass என்னும் டூல் பாஸ்வேர்டு மேனேஜராக செயல்படுகின்றது. இது ஒரு இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளாகும்.

லினக்ஸிற்கு keypassx-ம் ஆன்ட்ராய்டு கருவிகளுக்கு KeyPass2Andriod என்னும் டூலும் பயன்படுகின்றது.இதை எளிதாக இன்ஸ்டால் செய்து எளிதாக பயன்படுத்தலாம்.
லினக்ஸ் டெஸ்க்டாப்பில் பயன்படும் keypassx.
Keypass என்பது அடிப்படையில் விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டத்திற்கென்று உருவாக்கப்பட்டது. இந்த அப்ளிகேசனின் ஹைலட்ஸ் என்னவென்றால் ஓபன்சோர்ஸ், லைட் வெய்ட் மற்றம் இலவசம். பாஸ்வேடு டேட்டாபேஸ்களை AES ENCRYPTION செய்தல், ஆட்டோ ஜெனரேட் பாஸ்வேர்டு என இதன் பயன்கள் அசத்தல்.
கீபாஸ்எக்ஸ்சை MONO-வின் துனை கொண்டு லினக்ஸினில் நிறுவலாம். MONO என்பது டாட்நெட் ஃப்ரேமினால் ஆன ஓபன் சோஸ் ஆப் ஆகும்.இதை நிறுவிய பிறகு உபுண்டு இயங்கு தளத்தில் UBUNTU UNITY DASH பயன்படுத்தி கீபாஸ்எக்ஸை ஆக்சஸ் செய்யலாம். இதில் நாம் உருவாக்கும் மாஸ்டர் பாஸ்வேர்டு மற்றவர்களினால் ஊகிக்க முடியாதவதாக கடினமானதாக இருக்க வேண்டும். உங்கள் பெயரையோ அல்லது பிற்ந்த தேதியையோ பாஸ்வேர்டாக உபயோகிக்காதீர்கள்.
ஆண்ட்ராய்டு கருவிகளில் பயன்படும் KeyPass2Android
KeyPass2Android என்பது ஆண்ட்ராய்டு கருவிகளில் பயன்படும் பாஸ்வேர்டு மேனேஜர் டூல் என்பதை நாம் அறிவோம். இதன் இண்டர்பேஸ் மற்றும் ஃபரீ டேட்டாபேஸ் நம்க்கு நல்ல பலன் அளிக்கின்றது. இதை இணையத்தில் google play store-ல் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.
ஆகையால் இந்த டூலை இப்பொழுதே இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.இதன் மூலம் நாம் ஒவ்வொரு பாஸ்வேர்டையும் நிணைவில் வைக்கத் தேவையில்லை.
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.
TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI
SUCH AS
C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.



ads Udanz

No comments:

Post a Comment