Wednesday, January 3, 2018

டேலி இஆர்பி-9 -ல்காஸ்ட் செண்டர், காஸ்ட் கேட்டகிரி..




டேலியில் குறிப்பிட்ட யூனிட் ஒன்றினை மையமாக வைத்து நாம் அதற்கான இன்ஃப்லோ(inflow) மற்றும் அவுட்ஃப்லோ(outflow) ஆகியவற்றை நாம் எளிதாக கணக்கிடலாம்.
அந்த குறிப்பிட்ட யூனிட்டை நாம் காஸ்ட் செண்டராக உருவாக்கலாம்.அந்த காஸ்ட் செண்டர்களை நாம் குரூப் செய்யலாம். அந்த குரூப்பின் பெயராக காஸ்ட் கேட்டகிரி இருக்கும்.
உதாரணமாக நாம் சேல்ஸ்மேன் என்கின்ற ஒரு காஸ்ட் கேட்டகிரியை உருவாக்குவதாக வைத்துக் கொள்வோம்.இது ஒரு குரூப். இந்த குரூப்பின் கீழ் நாம் காஸ்ட் செண்டர்களை உருவாக்கலாம்.அதாவது MR.X,MR.Y என வைத்துக் கொள்வோமே.
இப்பொழுது சேல்ஸ்மேன் கமிசன் ரூ 15000 என எடுதுக்கொள்வோம். இந்த கமிசனை நாம் வவுச்சர் என்ட்ரியில் MR.X எங்கின்ற காஸ்ட் செண்டருக்கும்MR.Y என்கின்ற காஸ்ட் செண்டருக்கும் பிரித்து மதிப்பிடலாம்.
முதலில் டேலி இஆர்பி9-ல் ஒரு கம்பனி ஒன்றை உருவாக்கிக் கொள்வோம்.


அதன் பிறகு f11 என்கின்ற கீயை பிரஸ் செய்து accounting features என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் maintain cost center என்பதிலும் maintain more than one payroll or cost category என்பதிலும் yes கொடுக்கவும்.
அடுத்ததாக cost category உருவாக்க வேண்டும்,.அதற்கு கேட் வே ஆஃப் டேலியில் accounts info என்பதை செலெக்ட் செய்து அதில் cost category என்பதை செலெக்ட் செய்யவும். இப்பொழுது சிங்கிள் க்ரீயேட் என்பதை செலெக்ட் செய்து அடுத்து வரும் விண்டோவில் sales man என ஒரு காஸ்ட் கேட்டகிரி ஒன்றை உருவாக்கவும்.

அடுத்ததாக அதே அக்கவுண்ட்ஸ் இன்ஃபோ வில் காஸ்ட் செண்டர் எனக் கொடுத்து மல்டிபிள் கிரியேட் என்பதில் சென்று  sales man என்கின்ற கேட்டகிரியின் கீழ் mr.x, mr.y என இரு காஸ்ட் செண்டர் உருவாக்கவும்.

இப்பொழுது அக்கவுண்டிங் வவுச்சரில் f5 என்கின்ற கீயை பிரஸ் செய்யவும். இது பேமெண்ட் வவுச்சர் டைப்பாகும்.
இதில் டெபிட் என்பதற்கு அடுத்ததில் கர்சரை வைத்து ALT+C என்கின்ற கீயை பிரஸ் செய்யவும். இப்பொழுது ledger creation விண்டோ ஒபன் ஆகும். இதில் commission paid என்கின்ற லெட்சரை indirect expenses என்ற குரூப்பின் கீழ் உருவாக்கவும். அதில் cost centers are applivcable என்பதில் yes கொடுக்கவும்.

இப்பொழுது டெபிட் என்பதில் 15000 எனக் கொடுத்து எண்டர் கீயை பிரஸ் செய்யவும்.இப்பொழுது புதிய விண்டோ ஒன்று ஒபன் ஆகும்.
அதில் சேல்ஸ் மேன் என்கின்ற கேட்டகிரியை செலெக்ட் செய்து அதில் mr.a, mr.b ஆகியோருக்கு முறையே ரூ 80000 மற்றும் ரூ 7000 எனக்கொடுக்கவும்.

இப்பொழுது  cr என்பதில் cash என்பதை தேர்வு செய்து வவுச்சர் என்ட்ரியை உருவாக்கி முடிக்கவும்.

இப்பொழுது கேட் வே ஆஃப் டேலியில் display கிளிக் செய்து அதில் statements of accounts என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் விண்டோவில் cost centre என்பதை செலெக்ட் செய்யவும்அதில் category summary, cost centre breakup முதலான வற்றை நாம் பார்வையிடலாம்.
மேலும் ஒவ்வொரு காஸ்ட் செண்டருக்கும் நாம் ப்ரீ டிஃபைன்டு மதிப்பை உருவாக்கலாம்.
இதற்கு F11 என்பதை பிரஸ் செய்து அதில் Use predefined cost centre allocations in transactions என்கின்ற  ஆப்சனுக்கு யெஸ் கொடுக்கவும். அதில் கிளாஸ்  பெயரில் sales என்று கொடுத்து(user defined name) அடுத்து சேல்ஸ் மேன் கேட்டகிரியில் உதாரணத்துக்கு இரு காஸ்ட் செண்டருக்கும் முறையே 60 %, 40% எனக் கொடுக்கவும்.

இப்பொழுது வவுச்சர் பதிவில் (பேமெண்ட் டைப்) கிளாஸ் நேம் என்பதில் சேல்ஸ் எனத் தேர்ந்தெடுத்து அதில் commission paid என்கின்ற லெட்சருக்கு ரூ 30000 என டெபிட் செய்து கேஷ் எங்கின்ற அக்கவுண்டை க்ரெடிட் செய்யவும்.

இப்பொழுது கேட்வே ஆஃப் டாலியில் display என்பதை கிளிக் செய்து daybook என்பதை தேர்வு செய்தால் நமக்கு இரு காஸ்ட் சென்டருக்கும் முறையே ரூ 18000, ரூ 12000 மதிப்பிரித்தப்பட்டிருக்கும் .


இவ்வாறு டேலியில் காஸ்ட் செண்டர் பயன்படுகின்றது.
-------முத்து கார்த்திகேயன், மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment